இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி இன்று அதிகாலை இங்கிலாந்து நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இன்று செல்லும் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியின் தலைவராக 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ண அணியை வழிநடத்திய சரித் அசலன்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள இலங்கை “ஏ” அணியில் இணைந்து உள்ளதால் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி அங்கு சென்ற பின் இலங்கை அணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி இங்கிலாந்து மண்ணில் போட்டித்தொடருக்கு முன்னதாக 2 நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடவுளள்து. அதன் பின் 2 நான்கு நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிகளிலும், 3 இளைஞர் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் சுமார் 1 மாத காலத்திற்கு நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் 1ஆவது டெஸ்ட் போட்டி கேம்ப்ரிஜ் மைதானத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.   

இந்தத் தொடருக்கு இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி செல்ல முன் நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால பேசுகையில் “இந்தக் குழாமில் உள்ள 15 பேருக்கும் இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது என்பது இது ஒரு அரிய வாய்ப்பு ஆகும். முடிந்த அளவு உங்களது திறமைகளை வெளிப்படுத்தி திறமையான ஒரு அணியாக விளையாடுங்கள். நீங்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் இணைந்து விளையாட முன் இந்தத் தொடர் உங்கள் அனைவருக்கும் நல்ல அனுபவம் உள்ள தொடராக அமையும்” என்றார்.

தென் ஆபிரிக்க 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு இங்கிலாந்து செல்லும் அணியில் அனுபவம் உள்ள வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கு எதிரான தொடரில் தலைமைப் பதவி அவிஷ்க பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தத் தொடரில் அனுபம் நிறைந்த காலி ரிச்மன்ட் கல்லூரி நட்சத்திரம் சரித் அசலன்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியில் விளையாடிய தமித்த சில்வா, சம்மு அஷான் மற்றும் ஜெஹன் டேனியல் ஆகியோர் இந்த இங்கிலாந்து தொடரில் விளையாடுகின்றனர். அணிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார மற்றும் சகலதுறை வீரர் வணிந்து ஹசரங்க ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இத்தொடரில் உப தலைவராக தென் ஆபிரிக்க 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கு எதிரான தொடரில் தலைமைப் பதவி வகித்த அவிஷ்க பெர்னாண்டோ கடமையாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு பகுதிகளிலும் பலம் பொருந்திய இலங்கை அணியாக இந்த அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் குழாம்

 • சரித் அசலன்க (தலைவர்) – ரிச்மண்ட் கல்லூரி, காலி / காலி சிசி
 • அவிஷ்க பெர்னாண்டோ (துணை தலைவர்) – புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ
 • சம்மு அஷான்ஆனந்தா கல்லூரி, கொழும்பு
 • வணிந்து ஹசரங்கரிச்மண்ட் கல்லூரி, காலி / இலங்கை துறைமுக அதிகார சிசி
 • லஹிரு குமாரகண்டி திரித்துவக் கல்லூரி / என்.சி.சி
 • ஜெஹான் டேனியல்புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
 • தமித சில்வாமாலியதேவ கல்லூரி, குருநாகல்
 • நவிந்து நிர்மல்புனித அலோசியஸ் கல்லூரி, காலி
 • அஷென் பண்டார -St. அலோசியஸ் கல்லூரி, காலி
 • பத்தும் நிசங்க  – இசிபத்தன கல்லூரி, கொழும்பு
 • திசறு ரஷ்மிக டில்ஷான்கண்டி திரித்துவக் கல்லூரி
 • மிஷென் சில்வாபுனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ
 • பிரவீண் ஜயவிக்ரமபுனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ
 • டிலான் ஜயலத்கண்டி திரித்துவக் கல்லூரி / என்.சி.சி
 • திலான் பிரஷன்  – புனித செர்விஸ்ட்டர் கல்லூரி, மாத்தற

அதிகாரிகள்

 • நெல்சன் மெண்டிஸ்தலைமை அதிகாரி
 • ரோய்ய் டயஸ்தலைமைப் பயிற்சியாளர்
 • மஹிந்த ஹலங்கொட  – மேலாளர்
 • சரச்சந்திர  டி சில்வா – SLSCA பிரதிநிதி
 • ரவீந்திர புஸ்பகுமாரபந்துவீச்சுப் பயிற்சியாளர்
 • தர்ஷன் வீரசிங்கபயிற்சி அளிப்பவர்
 • அஜந்தா வத்தேகமஉடல் பயிற்சியாளர்

தொடரின் கால அட்டவணை

ஜூலை 21-22 : பயிற்சிப் போட்டி –  முனைவோர் அழைப்பு லெவன் எதிர் இலங்கை U19

ஜூலை 26-29 : 1ஆவது டெஸ்ட் போட்டிஇங்கிலாந்து U19 எதிர் இலங்கை U19

ஆகஸ்ட் 03-06 : 2ஆவது டெஸ்ட் போட்டிஇங்கிலாந்து U19 எதிர் இலங்கை U19

ஆகஸ்ட் 10 : 1ஆவது இளைஞர் ஒருநாள் போட்டிஇங்கிலாந்து U19 எதிர் இலங்கை U19

ஆகஸ்ட் 13: 2ஆவது இளைஞர் ஒருநாள் போட்டிஇங்கிலாந்து U19 எதிர் இலங்கை U19

ஆகஸ்ட் 16: 3ஆவது இளைஞர் ஒருநாள் போட்டிஇங்கிலாந்து U19 எதிர் இலங்கை U19