Home Tamil T20 உலகக்கிண்ண சம்பியனாக மகுடம் சூடியது அவுஸ்திரேலியா

T20 உலகக்கிண்ண சம்பியனாக மகுடம் சூடியது அவுஸ்திரேலியா

ICC Men’s T20 World Cup 2021

114

நியூசிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐசிசி T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, கன்னி T20 உலகக்கிண்ணத்தை கைவசப்படுத்தியது.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச், முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். அதன்படி, அவுஸ்திரேலிய அணி மாற்றங்களின்றி களமிறங்க, நியூசிலாந்து அணி உபாதைக்கு முகங்கொடுத்துள்ள டெவோன் கொன்வேவுக்கு பதிலாக டிம் செய்பர்ட்டை இணைத்திருந்தது.

>> மஹேல ஜயவர்தனவிற்கு ICC இன் உயர் கௌவரம்

அவுஸ்திரேலிய அணியின் பணிப்பின்படி, இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு அபாரமான ஆரம்பம் கிடைக்கவில்லை. முதல் 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

மார்டின் கப்டில் 35 பந்துகளுக்கு 28 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்த நிலையில், கேன் வில்லியம்ஸன் முழுமையாக நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை தாங்கிப்பிடிக்க, அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆரம்பத்தில் நிதானமாக ஓட்டங்களை பெற ஆரம்பித்த கேன் வில்லியம்ஸன், மத்திய ஓவர்களில் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில், இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆகியோர் 33 பந்துகளில் அரைச்சதங்களை அடித்திருந்த நிலையில், இறுதிப்போட்டியின் வேகமான அரைச்சதத்தை வில்லியம்ஸன் பதிவுசெய்தார்.

அதன்பின்னர், மிச்சல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 22 ஓவர்களை விளாசிய வில்லியம்ஸன், 48 பந்துகளில் 85 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதேநேரம், T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை, மே.தீவுகளின் மார்லன் சாமியல்ஸுடன்(2016) சமப்படுத்தினார். வில்லியம்ஸனின் ஆட்டமிழப்புக்கு பின்னர், கிளேன் பிலிப்ஸ் 18 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீஷம் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, ஆஸி.

அணியின் சார்பில், ஜோஷ் ஹெஷல்வூட் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் சார்பாக, ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், தலைவருமான ஆரோன் பின்ச் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தாலும், மிச்சல் மார்ஷ் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அபார அரைச்சதங்களை பதிவுசெய்தனர்.

குறிப்பாக, கேன் வில்லியம்ஸன் T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில், பெற்றுக்கொண்ட வேகமான அரைச்சதத்தை முறியடித்து, 31 பந்துகளில் மிச்சல் மார்ஷ் அரைச்சதம் கடந்ததுடன், 50 பந்துகளில் 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதற்கு அடுத்தப்படியாக டேவிட் வோர்னர் 38 பந்துகளில் 53 ஓட்டங்களையும், இறுதியாக கிளேன் மெக்ஸ்வேல் தனக்கே உரித்தான பாணியில், 18 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன் அடிப்படையில், அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, இலகுவாக வெற்றியிலக்கை அடைந்ததுடன், தங்களுடைய கன்னி T20 உலகக்கிண்ணத்தையும் கைப்பற்றியது. நியூசிலாந்து சார்பாக, ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை, கடந்த 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் கிண்ணத்தை தவறவிட்ட நியூசிலாந்து அணி, தற்போது, T20 உலகக்கிண்ணத்தையும் தவறவிட்டது. அவுஸ்திரேலிய அணி, 2009ம் ஆண்டுக்கு பின்னர், T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக தகுதிபெற்றதுடன், சம்பியனாகவும் மகுடம் சூடிக்கொண்டது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<


Result


New Zealand
172/4 (20)

Australia
173/2 (18.5)

Batsmen R B 4s 6s SR
Martin Guptill c Mitchell Starc b Adam Zampa 28 35 3 0 80.00
Daryl Mitchell c Matthew Wade b Josh Hazlewood, 11 8 0 1 137.50
Kane Williamson c Steve Smith b Josh Hazlewood, 85 48 10 3 177.08
Glenn Phillips c Glenn Maxwell b Josh Hazlewood, 18 17 1 1 105.88
James Neesham not out 13 7 0 1 185.71
Tim Seifert ( not out 8 6 1 0 133.33


Extras 9 (b 1 , lb 3 , nb 1, w 4, pen 0)
Total 172/4 (20 Overs, RR: 8.6)
Bowling O M R W Econ
Mitchell Starc 4 0 60 0 15.00
Josh Hazlewood, 4 0 16 3 4.00
Glenn Maxwell 3 0 28 0 9.33
Pat Cummins 4 0 27 0 6.75
Adam Zampa 4 0 26 1 6.50
Mitchell Marsh 1 0 11 0 11.00


Batsmen R B 4s 6s SR
David Warner b Trent Boult 53 38 0 0 139.47
Aaron Finch c & b Trent Boult 5 7 0 0 71.43
Mitchell Marsh not out 77 50 0 0 154.00
Glenn Maxwell not out 28 18 0 0 155.56


Extras 10 (b 0 , lb 4 , nb 0, w 6, pen 0)
Total 173/2 (18.5 Overs, RR: 9.19)
Bowling O M R W Econ
Trent Boult 4 0 18 2 4.50
Tim Southee 3.5 0 43 0 12.29
Adam Milne 4 0 30 0 7.50
Ish Sodhi 3 0 40 0 13.33
Mitchell Santner 3 0 23 0 7.67
James Neesham 1 0 15 0 15.00