கொவிட்-19 காரணமாக ஜிம்பாப்வே தொடரை தவறவிடும் கமில் மிஷார

Zimbabwe tour of Sri Lanka 2022

78
 

சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட, கமில் மிஷார கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளார்.

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான கமில் மிஷாரா ஜிம்பாப்வே தொடரில் விளையாடமாட்டார் என்பதுடன், கொவிட்-19 தொற்று காரணமாக தொடரிலிருந்து விலகும் மூன்றாவது வீரராவார்.

>>சதீஷ, துனித்தின் அதிரடியில் உகண்டாவை வீழ்த்திய இலங்கை U19 அணி

இதற்கு முன்னர் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் புதுமுக துடுப்பாட்ட வீரர் ஜனித் லியனகே ஆகியோர் கொவிட்-19 தொற்று காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

கமில் மிஷார தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கை அணி வீரர்கள் ஜிம்பாப்வே தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 16, 18 மற்றும் 21ம் திகதிகளில் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<