தனது பாடசாலைக்காக கிரிக்கெட் மைதானம் அமைக்கும் தினேஷ் சந்திமால்

178

அம்பலாங்கொடை தர்மசோக கல்லூரியில் அமைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் மைதானம் குறிப்பிட்ட பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் திறந்து வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு

இதேவேளை இந்த கிரிக்கெட் மைதானமானது இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான தினேஷ் சந்திமாலின் நிதி உதவி மூலம் நிர்மாணிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால் அம்பலாங்கொடை தர்மசோக கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வெளியிடப்பட்டிருக்கும் சில தகவல்கள் தினேஷ் சந்திமால் தனது முன்னாள்  பாடசாலை மைதானத்தின் நிர்மாணிப்பிற்காக 20 மில்லியன் ரூபாயினை பங்களிப்புச் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

>>டிம் சௌதி உலகக்கிண்ணத்தில் விளையாடுவது உறுதி

அதேநேரம் தினேஷ் சந்திமாலின் இந்த செயலினை அனைவரும் பாராட்டி இருப்பதோடு, இது ஏனையோருக்கு முன்னுதாரணமான செயலாகவும் காணப்படுகின்றது.

செய்தி மூலம் – News Wire

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<