உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு

SLC Major Clubs T20 Tournament 2023

167

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் வெள்ளிக்கிழமை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற பிரதான கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட போட்டித் தொடரில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைக்காததையடுத்து, குறித்த போட்டித் தொடரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும், பிரதான கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட போட்டித் தொடரை இடைநிறுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பிக்காவிட்டாலும், சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கு அமைய விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இருந்து உரிய விளக்கம் கிடைக்கும் வரை குறித்த போட்டித் தொடரை இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது.

மறுபுறத்தில் இலங்கையில் கடந்த சில வாரங்களாக இடைவிடாது பெய்து வந்த மழையும் இந்தத் தொடரை நிச்சயம் பாதித்து இருக்கும் என்பதோடு, அவ்வாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தால், பல போட்டிகள் மழையால் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். எனவே, குறித்த தொடரை இடைநிறுத்தியது வீரர்களுக்கும், அணிகளுக்கும் சாதகமாக மாறியது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதுடன், அதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்துமாறு அமைச்சிடமிருந்து அனுமதி வழங்கப்பட்டடுள்ளது.

உள்ளூர் போட்டிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியது SLC

இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி பிரதான கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட போட்டித் தொடரில், ‘B’ குழுவிற்கான போட்டிகள் வெள்ளிக்கிழமை (22) முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை, 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை மற்றும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் விளையாட முடியாத அனைத்துப் போட்டிகளும் ஒக்டோபர் 6 முதல் 8 வரையும், 13 முதல் 15 வரையும் மற்றும் 20 முதல் 22 வரை இடைப்பட்ட நாட்களில் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இறுதிப்போட்டி ஒக்டோபர் 26 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<