இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இரண்டு யாழ்.வீராங்கனைகள்

2170

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான 12 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணிக் குழுாமில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் மற்றும் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

பதினொராவது ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் சிங்கபூரில் நாளை (01) ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடருக்கான தேசிய மகளிர் அணிக்குழாமை, இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

Photos: Sri Lanka Netball Team 2018 – 11th Asian Netball Championship

Photos of Sri Lanka Netball Team 2018 – 11th Asian Netball..

ஆசிய சம்பியன்ஷிப் தொடருக்காக 30 பேர்கொண்ட குழாம் கடந்த ஜனவரி மதாத்திலிருந்து புதிய பயிற்றுவிப்பாளர் திலக ஜினதாஸவின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த குழாமிலிருந்து சிறந்த 12 பேர் ஆசிய சம்பியன்ஷிப் தொடருக்காக பெயரிடப்பட்டுள்ளனர்.  

சர்வதேச மட்டத்திலான நட்சத்திர வீராங்கனையான யாழ்.மாவட்டத்தின் தர்ஜினி சிவலிங்கம் இலங்கை தேசிய அணியில் தனக்கான இடத்தை பெற்றுள்ளார். அத்துடன், யாழ்.மாவட்டத்திலிருந்து மற்றுமொரு வீராங்கனையாக எழிலேந்தினி சேதுகாவலர் புதிதாக அணியில் இடம்பிடித்துள்ளார். தர்ஜினியை போன்ற திறமையை கொண்டுள்ள எழிலேந்தினி அவரது உயரத்திலும் 13cm உயரம் குறைந்தவராக உள்ளார் (தர்ஜினி 208cm, எழிலேந்தினி 193cm).

எழிலேந்தினி ஜனவரியிலிருந்து அணியுடன் பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய வலைப்பந்தாட்ட போட்டியில் இவரது திறமையை கண்டறிந்த பயிற்றுவிப்பாளர்கள் உடனடியாக தேசிய அணியில் அவரை இணைத்துக்கொண்டதுடன், தற்போது ஆசிய சம்பியன்ஷிப் குழாத்திலும் இணைத்துள்ளனர். எழிலேந்தினி CDB அணிக்காக விளையாடி வருவதுடன், தர்ஜினி செலான் வங்கி அணிக்காக விளையாடி வருகின்றார். எழிலேந்தினியுடன் இம்முறை புதுமுகமாக கடற்படை அணியின் துலாங்கி வன்னித்திலக்க பெயரிடப்பட்டுள்ளார்.

நட்பு ரீதியிலான அழைப்பு வலைப்பந்து சுற்றுத் தொடரின் சம்பியனாக இலங்கை

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு..

இம்முறை ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் இலங்கை அணியின் தலைவியாக சதுரங்கனி ஜயசூரிய செயற்படவுள்ளதுடன், உப தலைவியாக தர்சிகா அபேவிக்ரம செயற்படவுள்ளார். அத்துடன் 2016ஆம் ஆண்டு ஆசிய சம்பியன்ஷிப் தொடரில் விளையாடிய கயான்ஜலி அமரவன்ச, ஹசித மெண்டிஸ், துலாங்க தனன்ஜி, தர்சிகா அபேவிக்ரம, சேருகா குமாரி கமகே மற்றும் கயானி திசாநாயக்க ஆகியோரும் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இறுதியாக, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

சதுரங்கனி ஜயசூரிய (தலைவி), தர்சிகா அபேவிக்ரம, தர்ஜினி சிவலிங்கம், கயாந்தி திசாநாயக்க, திலினி வதேகெதர, கயான்ஜலி அமரவன்ச, சேருகா கமகே, ஹசித மெண்டிஸ், துலாங்கி வன்னிதிலக்க, நவுச்சலி ரஜபக்ஷ, துலாங்க தனன்ஜி, எழிலேந்தினி சேதுகவாவலர்