டிம் சௌதி உலகக்கிண்ணத்தில் விளையாடுவது உறுதி

Cricket World Cup 2023

41

உலகக்கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி விளையாடுவார் என்பதை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது டிம் சௌதியின் வலதுகை பெருவிரலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. குறித்த எழும்பு முறிவுக்கு சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

எனவே டிம் சௌதி உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், உலகக்கிண்ணத்தின் முதல் போட்டிக்கு முன்னர் அவர் உடற்தகுதியை பெறுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

டிம் சௌதி உடற்தகுதியுடன் அணியில் இணையும் இதேநேரம், மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான கெயல் ஜெமிசனும் நியூசிலாந்து குழாத்துடன் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பங்களாதேஷ் தொடரையடுத்து அணியுடன் இணையும் இவர் உத்தியோகபூர்வமாக குழாத்தில் இடம்பெறவில்லை என்பதுடன், மேலதிக வீரர்களில் ஒருவராக இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை அடுத்த மாதம் 5ம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<