U19 உலகக் கிண்ண பெறுமதிக்க அணியில் இலங்கையின் சமோதி

ICC Women’s U19 T20 World Cup 2025

49
Chamodi Praboda

மலேசியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி இன் 19 வயதின்கீழ் மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மிகவும் பெறுமதிமிக்க வீராங்கனைகளைக் கொண்ட 19 வயதின்கீழ் உலக அணியில் இலங்கையின் சமோதி ப்ரபோதா பெயரிடப்பட்டுள்ளார். 

2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி 19 19 வயதின்கீழ் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் நேற்று (02) நிறைவடைந்த நிலையில், இந்த தொடரின் சிறந்த வீராங்கனைகளைக் கொண்ட அணியை (Team of the Tournament) சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது 

12 வீராங்கனைகளைக் கொண்ட இந்த சிறப்பு அணியில் இந்தியாவைச் சேர்ந்த 4 வீராங்கனைகள், தொன்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 3 வீராங்கனைகள், இங்கிலாந்தைச் சேர்ந்த 2 வீராங்கனைகள், இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 

அதேபோல, 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண அணியின் தலைவியாக தென்னாப்பிரிக்காவின் கேலா ரினேக் பெயரிடப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், இம்முறை 19 வயதின்கீழ் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கையின் 15 வயதுடைய சமோதி ப்ரபோதா 10ஆம் இலக்க வீராங்கனையாக பெயரிடப்பட்டுள்ளார். 

ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர், 6.33 என்ற சராசரியுடன் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் இரண்டு முறை தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது எக்கொனொமிக் ரேட் 3.80 ஆகும். 

19 வயதின்கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ண அணி விபரம் 

கேலா ரினேக் (தலைவி – தென்னாப்பிரிக்கா), கொங்காடி ட்ரிஷா (இந்தியா), ஜெம்மா போத்தா (தென்னாப்பிரிக்கா), டாவினா பெரின் (இங்கிலாந்து), குணாலன் கமலினி (இந்தியா), கொய்மே ப்றே (அவுஸ்திரேலியா), பூஜா மஹாட்டோ (நேபாளம்), கேட்டி ஜோன்ஸ் (விக்கெட் காப்பளார் – இங்கிலாந்து), ஆயுஷி {க்லா (இந்தியா), சமோதி ப்ரபோதா (இலங்கை), வைஷ்ணவி ஷர்மா (இந்தியா), 12ஆவது வீராங்கனை: நிதாபிசெங் நினி (தென்னாப்பிரிக்கா) 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<