இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு

32

இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் கருப்பையா ராமகிருஷ்ணன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த 21ஆம் திகதி கொழும்பு கோல்ட்ஸ் கழக மதிவாணன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் லயன்நேஷன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க்கின் நிர்வாக இயக்குநர் கருப்பையா ராமகிருஷ்ணன் தெரிவாகினார்.

இதனிடையே, இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் பொருளாளராக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்ட லங்காதீப பத்திரிகையின் யொஹான் பாசுர புதிய செயலாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் பொருளாளராக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சம்பத் பெரேரா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, ThePapare.com ஊடகவியலாளர் சுதர்ஷன பீரிஸ் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வீரகேசரி பத்திரிகையின் நெவில் அந்தனி, தெரண தொலைக்காட்சியின் கசுன் கெலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஜயசாந்த பெரேரா மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சுசந்தி பிரேமசந்திர ஆகிய நால்வரும் சங்கத்தின் உப தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

லக்ஹட வானொலியின் நுவன் உதார உப செயலாளராகவும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புத்திக துனுசிங்க உப பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர, இலங்கையின் பிரதான ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 13 பேர் சங்கத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

லஹிரு ஹர்ஷன (லங்காதீப பத்திரிகை), சன்ஜீவ தர்மசேன (அத பத்திரிகை), நாமல் பத்திரகே (லங்காதீப பத்திரிகை), பிரசாத் சேனாதீர (ரங்கிரி வானொலி), சமீர பீரிஸ் (sportsphotography.lk), சுமிந்த தாரக (தெரண தொலைக்காட்சி), தினேஷ் பெரேரா (பிராந்திய நிருபர்), நுவன் அமரவன்ச (மவ்பிம பத்திரிகை), அசங்க ஹதிரம்பேல (ThePapare.com), லஹிரு துஷ்மந்த (ஹிரு தொலைக்காட்சி), சுரேஷி குணசேகர (ரூபவாஹினி கூட்டுத்தாபனம்), ஜயமால் சந்திரசிறி (லங்காதீப பத்திரிகை), சமிந்த காமினி (பிபிசி சேவை)

2017இல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கம் இலங்கையில் தற்போது செயல்பட்டு வருகின்ற ஊடகவியலாளர்களின் மிகப்பெரிய சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<