பானுக்க ராஜபக்ஷ முதல் T20 போட்டியில் ஆடுவது சந்தேகம்

231

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20i தொடரின் முதல் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

“T20I தொடரை வெற்றிக்கொள்ள முடியும்” – அவிஷ்க நம்பிக்கை

இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் விரல் உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருந்த பானுக்க ராஜபக்ஷ குறித்த உபாதையில் இருந்து மீளாததன் காரணமாகவே, இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்குபெறும் T20 தொடரின் முதல் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியிருக்கின்றது. 

அதன்படி, இலங்கை இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் அதிரடி அரைச்சதம் ஒன்றினை விளாசி இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த பானுக்க ராஜபக்ஷ, முதல் T20 போட்டியில் இல்லாதது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகின்றது. 

இறுதி நேரத்தில் இலங்கை அணியின் திட்டம் என்ன? கூறும் அசலங்க

இதேநேரம், குறித்த ஒருநாள் தொடரில் கால் உபாதைக்கு ஆளான வனிந்து ஹஸரங்க, இலங்கை – இந்திய அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டியில் ஆடுவார் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, பானுக்க ராஜபக்ஷவின் பிரதியீட்டு வீரராக அஷேன் பண்டார இலங்கை அணியில் இடம் பிடிப்பார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…