பாகிஸ்தான் மோதல் கைவிடப்பட முன்னேறியது இலங்கை

3336

பிரிஸ்டோல் – கௌண்டி மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 11வது லீக் போட்டி மைதானத்தில் உள்ள ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்டது.

பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்…

அதேநேரம்,  போட்டி கைவிடப்பட்டுள்ளதுடன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் பகிரப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றைய தினம் (07) பிரிஸ்டோலில் நடைபெறவிருந்தது. சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டதால் போட்டி நீண்ட நேரமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் மழைக்காலநிலை வழமைக்கு திரும்பியதில், ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக இந்தப் போட்டி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.  இதற்காக மைதானம் தயார்படுத்தப்பட்ட போதும், நடுவர்கள் மைதானத்தின் ஈரத்தன்மையை கருத்திற்கொண்டு போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.

ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக நடத்தும் முகமாக நடுவர்கள் மைதானத்தின் தன்மையை ஆராய்ந்திருந்தனர். இதன்போது, மைதானத்தின் சில பகுதிகளில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தது. அதனால் வீரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டியின் ஆடுகளத்தின் தன்மை என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடுவர்கள் மைதானத்தை ஆராய்ந்ததுடன், போட்டி மத்தியஸ்தர் எண்டி பைக்ரொப்ட்டுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னரே போட்டி கைவிடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

Photo Album – Sri Lanka vs Pakistan | ICC Cricket World Cup 2019 – Match 11

குறிப்பாக இந்த உலக்க கிண்ணத் தொடரில் இரண்டு அணிகளும் ஒரு தோல்வி மற்றும் ஒரு வெற்றியினை சந்தித்திருந்த நிலையில், இந்த முடிவு அணிகளுக்கு ஏமாற்றத்தை வழங்கியுள்ளது. அதேநேரம், வழங்கப்பட்டுள்ள புள்ளிகள் அடிப்படையில், இலங்கை அணி 3 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கும், பாகிஸ்தான் அணி அதே 3 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக் கிண்ணத் தொடர்களில் இதற்கு முன்னர் 7 தடவைகள் மோதியதுடன், அதில் பாகிஸ்தான் அணி அனைத்து தடவைகளும் வெற்றிபெற்றுள்ளது. எனினும், முதன்முறையாக உலகக் கிண்ணத்தில் வைத்து இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி வெற்றித்தோல்வியின்றி கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<