சர்வதேச கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள எச்சரிக்கை

121

தற்போது நிலவும் கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக உலகில் இடம்பெற்ற அனைத்து தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளும் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. 

இலங்கையில் IPL நடக்குமா? வெளியான புதிய தகவல்

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை தங்கள்…….

இந்த தருணத்தில், சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ஐ.சி.சி.) சூதாட்டத் தரகர்கள் (Match Fixers) தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. 

தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாத காரணத்தினால், கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கும். இந்த வருமானக் குறைவைக் காரணமாக கொள்ளும் சூதாட்டத் தரகர்கள் குறைவான வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்களை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச கிரிக்கெட் வாரியமும் கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. 

சூதாட்ட தரகர்கள் தொடர்பான விடயம் பற்றி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியான அலெக்ஸ் மார்ஷல் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். 

”கொவிட்-19 ஆனது இந்த உலகில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதிலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதிலும் ஒரு தற்காலிக தடையை உருவாக்கியிருக்கலாம். ஆனால், மோசடிக்காரர்கள் (தடைகள் இல்லாமல்) உயிர்ப்புடன் இருக்கின்றனர்.”  

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அலெக்ஸ் மார்ஷல், சூதாட்ட தரகர்கள் பற்றி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு விழிப்புடன் உள்ளதாக குறிப்பிட்டதோடு, சூதாட்ட தரகர்களிடம் இருந்து கிரிக்கெட் வீரர்களை பாதுகாக்க தங்களின் சார்பில் இருந்து இயலுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<