IPL தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Indian Premier League 2023

330

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) இந்த பருவகாலத்துக்கான (2023) போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மும்பை மற்றும் பூனேவில் மாத்திரம் போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில், 16வது பருவகாலத்துக்கான போட்டிகளில் ஒவ்வொரு அணிகளின் சொந்த மைதானம் மற்றும் எதிரணிகளின் மைதானங்களில் தலா 7 போட்டிகள் நடைபெறவுள்ளன.

பதவியை இராஜினாமா செய்தார் சேட்டன் சர்மா!

மார்ச் 31ம் திகதி ஆரம்பிக்கவுள்ள IPL தொடர் 70 போட்டிகளை உள்ளடக்கியுள்ளதுடன், 12 மைதானங்களில் 52 நாட்கள் போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சுபர் கிங்ஸ் அணிகள் அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மோதவுள்ளன.

இம்முறை 18 நாட்களில் தலா 2 போட்டிகள் வீதம் நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் பி.ப 03.30 மற்றும் இரவு 07.30 ஆகிய நேரங்களில் நடைபெறவுள்ளன.

குறிப்பாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியானது தங்களுடைய முதல் இரண்டு போட்டிகளை குவஹாடி மைதானத்தில் விளையாடவுள்ளதுடன், எஞ்சியுள்ள சொந்த மைதானத்துக்கான போட்டிகளை ராஜ்பூரில் விளையாடவுள்ளது. அதேநேரம் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய 5 சொந்த மைதான போட்டிகளை மொஹாலியில் விளையாடவுள்ளதுடன், கடைசி இரண்டு சொந்த மைதானத்துக்கான போட்டிகளை தர்மசாலாவில் விளையாடவுள்ளது.

IPL நிர்வாகம் லீக் போட்டிகளுக்கான மைதானங்களை அறிவித்துள்ள போதும், பிளே-ஓஃப் மற்றும் இறுதிப்போட்டிக்கான மைதானங்களை அறிவிக்கவில்லை. மார்ச் 31ம் திகதி ஆரம்பமாகும் IPL தொடரானது மே 28ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<