பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியில் சௌமிய சர்கார்

91

இலங்கையில் நடைபெறவுள்ள வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாத்தில் தேசிய அணி வீரர் சௌமிய சர்கார் இணைக்கப்பட்டுள்ளார்.

சௌமிய சர்கார் தேசிய அணிக்காக கடந்த காலங்களில் பிரகாசிக்க தவறியதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவருடைய பிரகாசிப்பை மீண்டும் மெழுகேற்றுவதற்கான வாய்ப்பாக பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷ் அணிக்கு முதன்முறையாக பயிற்றுவித்த காலப்பகுதியில் சௌமிய சர்கார் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், அதன்போது சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் பிரகாசிக்க தவறியிருந்த இவர், சந்திக்க ஹதுருசிங்கவின் மீள்வருகையுடன் வளர்ந்துவரும் குழாத்துக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ள வளர்ந்துவரும் குழாத்தின் தலைவராக சைப் ஹஸன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், மொஹமட் நயீம், ஷாகிர் ஹஸன், மஹ்மதுல் ஹசன் ஜோய் மற்றும் மெஹிதி ஹாஸன் போன்ற திறமையை வெளிப்படுத்திவரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடர் அடுத்த மாதம் 14ம் திகதி முதல் 23ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், பங்களாதேஷ்  அணி ஆரம்ப போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் வளர்ந்துவரும் குழாம்

சைப் ஹஸன் (தலைவர்), பர்வீஷ் ஹொஷைன் எமோன், டன்ஷித் ஹஸன், சஹாடத் ஹொஷைன், மஹ்முதுல் ஹஸன் ஜோய், ஷகிர் ஹஸன், சௌமிய சர்கார், மெஹிதி ஹாஸன், ரகிபுல் ஹஸன், மிரிடுன்ஜோய் சௌத்ரி, டன்ஷிம் ஹஸன், ரிபோன் மொண்டல், முஷ்பிக் ஹஸன், அக்பர் அலி, மொஹமட் நயீம்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<