மொர்தஸா உட்பட மூன்று பங்களாதேஷ் வீரர்களுக்கு கொரோனா தொற்று

288
Mashrafe Mortaza

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரபி மொர்தஸா, இடது கை சுழற்பந்து வீச்சாளர் நஸ்முல் இஸ்லாம் மற்றும் ஆரம்ப வீரர் நபீஸ் இக்பால் ஆகியோருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சஹீட் அப்ரிடிக்கு கொவிட்-19 தொற்று

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறைவீரரான சஹீட் அப்ரிடிக்கு கொவிட்-19 எனப்படும்

பாராளுமன்ற உறுப்பினராக உள்ள மொர்தஸா தமது சொந்த ஊரான நரைலில் வைரஸ் தொற்றுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இஸ்லாமும் கொவிட்-19 தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட தனது சொந்த ஊரான நரயன்காஞ்சில் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார். 

வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பற்றி மொர்தஸா சனிக்கிழமை (20) தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். “எனக்கு கொவிட்-19 தொற்று இருப்பதை உறுதி செய்யும் சோதனை முடிவு இன்று கிடைத்தது. விரைவாக குணமடைவதற்கு எல்லோரும் பிரார்த்தியுங்கள். நோய்த் தொற்று உள்ளானவர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துவிட்டது. நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து நாம் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும். நான் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட்டு இருக்கிறேன். கொரோனா பற்றி பயப்படுவதற்கு பதில் நாம் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொர்தஸாவின் சித்தி, மனைவியின் சகோதரி மற்றும் அவரது இரு குழந்தைகளுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கடந்த ஒருசில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் காய்ச்சலினால் அவதிப்பட்டு வந்த மொர்தஸா கொரோனா தொற்றுக்கான சோதனையை மோற்கொண்டுள்ளார். தற்போது அவர் டாக்காவில் தனது வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடும் மொர்தஸா இந்த ஆண்டு ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். 

போட்டித் தடைக்குப் பிறகு ரஞ்சிக் கிண்ணத்தில் ஸ்ரீசாந்த்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்திற்கு

மறுபுறம் வைரஸ் தொற்றுக்கு உள்ளான மூன்று வீரர்களில் இளையவராக இருக்கும் 28 வயது இஸ்லாம் 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் காலடி எடுத்து வைத்தது தொடக்கம் இதுவரை ஒரு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 13 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.   

அதேபோன்று 34 வயதான இக்பால் 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். நபீஸ் இக்பால் தற்போதைய பங்களாதேஷ் ஒருநாள் அணித் தலைவர் தமிம் இக்பாலின் மூத்த சகோதரராவார். அவர் தற்போது சிட்டகோங் நகரில் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பங்களாதேஷில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளானவர்கள் எண்ணிக்கை 100,000 ஐ தாண்டி இருப்பதோடு 1400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரதேச அடிப்படையில் முடக்க நிலையை அமுல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 

பங்களாதேஷ் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக வரும் ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு தொடர்ந்து வரும் ஓகஸ்ட் மாதம் சொந்த நாட்டில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், தெற்காசியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பங்களாதேஷ் மாறி இருக்கும் சூழலில் இந்த போட்டிகள் நடைபெறுவதில் சந்தேகம் நிலவுகிறது. 

வரும் செப்டெம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் ஆசிய கிண்ண தொடர் நடப்பதிலும் சந்தேகம் இருப்பதோடு பங்களாதேஷ் வீரர்கள் நெருங்கிய எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் ஈடுபடுவது அவதானம் மிக்கதாக உள்ளது.    

முன்னதாக பாகிஸ்தானின் சஹீட் அப்ரிடி, தவ்பீக் உமர் மற்றும் சபர் சர்பராஸ் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க