இங்கிலாந்து குழாத்தில் இரு முக்கிய மாற்றங்கள்

Ireland tour of England 2023

271

அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாத்தில் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயார்ஸ்டோவ் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜொனி பெயார்ஸ்டோவ் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட முழங்கை உபாதை காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

LPL தொடரின் வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு ஆரம்பம்

தொடர்ந்தும் சிகிச்சைகளை பெற்றுவந்த இவர், தற்போது முழுமையாக குணமடைந்து அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக செயற்பட்டுவந்த பென் போக்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உபாதைக்குள்ளான ஜொப்ரா ஆர்ச்சர் இந்த பருவகாலத்திலிருந்து முழுமையாக வெளியேறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பென் போக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் வாய்ப்புகளை இழந்துள்ள போதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியாக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த கிரிஸ் வோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன், உள்ளூர் போட்டியொன்றில் சிறிய உபாதைக்கு முகங்கொடுத்திருந்த போதும் ஜேம்ஷ் அண்டர்சன் தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து தொடரில் அணியின் தலைவராக தொடர்ந்தும் பென் ஸ்டோக்ஸ் செயற்படவுள்ளதுடன், உப தலைவராக ஒல்லி போப் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமாத்திரமின்றி ஸ்டுவர்ட் புரோட், ஜோ ரூட், மார்க் வூட் மற்றும் ஜெக் லீச் போன்ற முன்னணி வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் முதலாம் திகதி முதல் நான்காம் திகதிவரை லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் குழாம்

பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), ஜேம்ஷ் அண்டர்சன், ஜொனி பெயார்ஸ்டோவ், ஸ்டுவர்ட் புரோட், ஹெரி புரூக், ஜெக் கிரவ்லே, பென் டக்கெட், டேன் லோவ்ரன்ஸ், ஜெக் லீச், ஒல்லி போப், மெதிவ் பொட்ஸ், ஒல்லி ரொபின்சன், ஜோ ரூட், கிரிஸ் வோக்ஸ், மார்க் வூட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<