IPL தொடரில் துடுப்பாட்டத்தில் ஜொலித்தவர்கள்

211
Top five Run Scorers

இம்முறை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நிறைவுக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த பருவங்களைப் போன்று அல்லாமல் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இந்தியாவின் இளம் வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தனர்.

>> Video – IPL தொடரில் பட்டையைக் கிளப்பும் இளம் நட்சத்திரங்கள்

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு .பி.எல் தொடர் ஆரம்பித்தது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் குறைந்த நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்தனர். இதன்காரணமாக நடப்பு .பி.எல் தொடர் அனைத்து வீரர்களுக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது. எனினும், இதனை பொருட்படுத்தாமல் வீரர்கள் துடுப்பாட்டத்தில் அசத்தியிருந்தனர்

மொத்தமாக 734 சிக்ஸர்கள், 1,582 பௌண்டரிகள் என்று ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்த இம்முறை .பி.எல் தொடரில் பெரிய தொகைக்கு விலைபோன நிறைய வீரர்கள் ஜொலிக்கவில்லை

அதேசமயம் சிறிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சர்வதேச போட்டி அனுபவம் இல்லாத இந்திய இளம் வீரர்கள் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். 

எதுஎவ்வாறாயினும், இம்முறை தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் 10 வீரர்களில் ஏழு பேர் இந்திய வீரர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

அதுமாத்திரமின்றி, 2 டெல்லி கெபிடல்ஸ் அணி வீரர்களும், 3 மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும், 3 ரோயல் செலஞ்சர்ஸ் அணி வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> IPL இல் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு சொதப்பிய வீரர்கள்

இதன்படி, இம்முறை .பி.எல் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்

  1. கே.எல்.ராகுல் (670 ஓட்டங்கள்)
@BCCI

இம்முறை .பி.எல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல்.ராகுல் இடம்பிடித்தார். முதல்தடவையாக அந்த அணியின் தலைவராகச் செயற்பட்டு லீக் தொடரின் ஆரம்பத்தில் இருந்து ஓட்டங்களைக் குவித்த அவர் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரருக்கான செம்மஞ்சள் நிற தொப்பியை .பி.எல் தொடர் நிறைவடையும் வரை தக்கவைத்துக் கொண்டார்.  

அத்துடன் இத்தொடரில் ஒரு சதமடித்த அவர், அதிக அரைச்சதம் (5) பெற்ற வீரராகவும் இடம்பிடித்தார். 

எனினும், இம்முறை .பி.எல் தொடரில் பிளேப் சுற்றுக்குத் தகுதிபெற பஞ்சாப் அணிக்கு வாய்ப்பு இருந்தாலும், சென்னை அணியுடனான கடைசி லீக் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் ஏமாற்றத்துடன் வெளியேறியது

எதுஎவ்வாறாயினும், ராகுல் விளையாடிய 14 போட்டிகளில் 670 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன் நடப்பு .பி.எல் தொடரில் ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களை அதிகபட்சமாக அவர் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 3 பருவங்களில் (593, 659, 670 ஓட்டங்கள்) 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தார். தோல்விகளால் துவண்டு போன கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கவும் இவர் முக்கிய பங்காற்றினார்

இதனையடுத்து இவர், இம்மாதம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஒருநாள், T20i அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட்மையும் குறிப்பிடத்தக்கது.

  1. ஷிகர் தவான் (618 ஓட்டங்கள்)
@BCCI

.பி.எல் போட்டிகள் வரலாற்றில் இரண்டு சதங்கள் அடுத்தடுத்து அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை இம்முறை .பி.எல் தொடரில் நிகழ்த்திய டெல்லி கெபிடல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான், இம்முறை தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்

இவரது அபார ஆட்டம் டெல்லி அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றது என்று சொல்லலாம். 

இவர் டெல்லி அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருந்து வருகிறார். 17 போட்டிகளில் 2 சதம் மற்றும் 2 அரைச்சதம் உள்ளடங்கலாக 618 ஓட்டங்களைக் குவித்துள்ளார்

>> Video – IPL தொடரில் கலக்கும் Yorker King நடராஜனின் கதை!

இவருடைய பங்களிப்பானது ஆரம்பத்தில் போதியளவு அந்த அணிக்கு கிடைக்காவிட்டாலும், லீக் போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடிய அந்த அணியை பிளே ஆப் சுற்றுவரை கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்

  1. டேவிட் வோர்னர் (548 ஓட்டங்கள்)
@BCCI

இம்முறை .பி.எல் தொடரில் வெளிநாட்டு வீரராகவும், அணித் தலைவராகவும் ஜொலித்த ஒரே வீரர் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் தான்.

இம்முறை .பி.எல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 548 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் .பி.எல் அரங்கில் தொடர்ச்சியாக 6 பருவங்களில், 500 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களைக் குவித்த வீரராக சாதனை படைத்தார் வோர்னர். 

எதுஎவ்வாறாயினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிறப்பாக வழிநடத்திபிளே–ஓப்‘ (‘எலிமினேட்டர்‘) சுற்றுக்கு அழைத்துச் சென்றார்

  1. ஸ்ரேயாஸ்யர் (519 ஓட்டங்கள்)
@BCCI

.பி.எல் வரலாற்றில் முதல்தடவையாக இளம் வயது வீரராகவும், தலைவராகவும் டெல்லி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற பெருமை ஸ்ரேயாஸ்யரைச் சாரும்.

2ஆம், 3ஆம் இலக்க வீரராகக் களமிறங்கி டெல்லி அணிக்கு எப்போதும் நம்பிக்கை கொடுத்து வந்த இவர், இம்முறை .பி.எல் தொடரில் 3 அரைச்சதங்களுடன் 519 ஓட்டங்களைக் குவித்தார்

இதில் குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தலைவருக்கான இன்னிங்ஸ் ஒன்றை முன்னெடுத்து ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்று அசத்தினார்.

எதுஎவ்வாறாயினும், கடந்த காலங்களின் இந்திய அணியில் தொடர்ச்சியாக ஸ்ரேயாஸ்யருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும், இம்முறை .பி.எல் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார்.

  1. ஷான் கிஷன் (516 ஓட்டங்கள்)
@BCCI

இளையோர் உலகக் கிண்ணப் போட்டியின் மூலம் ஏற்றம் கண்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான ஷான் கிஷன் மும்பை அணியின் வெற்றிப்பயணத்தில் முக்கிய வீரராக அடையாளம் காணப்பட்டார்

இம்முறை .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வந்த வீரர் தான் ஷான் கிஷன். 22 வயதான விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஷான், இம்முறை .பி.எல் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 516 ஓட்டங்களைக் குவித்தார். இதில் நான்கு அரைச்சதங்களும் அடங்கும்.

இதுவரை இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இவர் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், இம்முறை .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

>> Video – சுழல் நாயகன் வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்..!

அத்துடன், மும்பை அணிக்காக 6 கோடி 20 இலட்சம் ரூபாய்வுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷான் கிஷன், இம்முறை .பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரருக்கான (30 சிக்ஸர்) விருதை பெற்றார்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணியில் டோனியின் இடத்தை நிரப்ப போகும் வீரர் ஷான் கிஷன் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் முறையே 6 முதல் 10 ஆகிய இடங்கள் வரை குயிண்டன் டி கொக் (503 ஓட்டங்கள்), சூர்யகுமார் யாதவ் (480 ஓட்டங்கள்), தேவ்துத் படிக்கல் (473 ஓட்டங்கள்), விராத் கோஹ்லி (466 ஓட்டங்கள்) மற்றும் ஏபி. டி.ல்லியர்ஸ் (454 ஓட்டங்கள்) ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<