சங்கக்காரவின் தலைமைப் பதவியை நீடிக்கவுள்ள MCC

75
 

கிரிக்கெட்டின் சட்டவிதிகளை உருவாக்கும் இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் (MCC), தற்போது உலகில் நிலவும் கொவிட்-19 பிரச்சினை காரணமாக தமது தலைவராக செயற்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை இன்னும் ஒரு வருடம் நீடிக்க விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது. 

பார்வையளர்களின்றிய கிரிக்கெட்டிற்கு இங்கிலாந்து வீரர் ஆதரவு

கொரோனா வைரஸ் ஆபத்து இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் ……….

சங்கக்கார கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். தற்போது சங்கக்கார தலைவர் பதவியினை பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையிலையே அவரை இன்னும் ஒரு வருடம் தலைவர் பதவியில் நீடிப்பதற்கான விருப்பத்தை மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் வெளியிட்டிருக்கின்றது.  

இதேநேரம், சங்கக்கார மெர்லிபோன் கிரிக்கெட் கழக தலைவர் பதவியினை நீடித்துக் கொள்வதற்கான இறுதி முடிவு, எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் சங்கக்காரவிற்கு புதிய தலைவரையோ அல்லது தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதையோ தெரிவு செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.   

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் பதவி பொதுவாக ஒருவருக்கு 12 மாதங்களுக்கு (அதாவது ஒரு வருடத்திற்கு) மாத்திரமே வழங்கப்படும். எனினும், உலகப் போர் போன்ற சில முக்கிய சந்தர்ப்பங்களில் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் பதவி ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. எனவே, குமார் சங்கக்கார மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் விருப்பத்திற்கு அமைய தலைவர் பதவியினை இன்னும் ஒரு வருடத்திற்கு நீடிப்பார் எனில் அது வரலாற்று சம்பவமாக பதிவாகும். 

பாகிஸ்தானில் கிரிக்கெட் புத்துயிர் பெற சங்கக்காரவின் அறிவுரை

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில்

இதற்கு முன்னர் குமார் சங்கக்கார மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் பிரித்தானியர் அல்லாத நபராகவும் வரலாறு படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

மறுமுனையில், கடந்த ஆறு மாதங்களாக குமார் சங்கக்காரவின் ஆளுகைக்குள் வந்த மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் கிரிக்கெட் விளையாட்டினை முன்னேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை சர்வதேச அளவில் மேற்கொண்டு வருகின்றது. 

இந்த முயற்சிகளில் முக்கிய ஒரு நகர்வாக, குமார் சங்கக்கார தலைமையிலான மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீளக் கொண்டு வரும் நோக்கோடு பாகிஸ்தானில் விளையாடிய கிரிக்கெட் சுற்றுப்பயணம் சிறந்த உதாரணமாக இருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<