Home Tamil போராட்ட வெற்றியுடன் ஒருநாள் தொடரினை சமநிலை செய்த இலங்கை

போராட்ட வெற்றியுடன் ஒருநாள் தொடரினை சமநிலை செய்த இலங்கை

262

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 26 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

அவுஸ்திரேலிய A அணிக்கு எதிராக சதத்தை தவறவிட்ட நுவனிந்து

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் மீதமிருக்க 1-1 என இலங்கை அணி தொடரினை சமநிலைப்படுத்தியிருக்கின்றது.

கண்டியில் இன்று (16) ஆரம்பமாகிய இரண்டாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியது.

இந்தப் போட்டிக்கான இலங்கை அணியில் காயமடைந்த வனிந்து ஹஸரங்கவிற்குப் பதிலாக, ஜெப்ரி வன்டர்செய் களமிறங்கியிருந்தார். மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்படி மெதிவ் குஹ்னமேன் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெற, ட்ராவிஸ் ஹெட்டும் ஆஸி. குழாத்தில் வாய்ப்பினைப் பெற்றிருந்தார்.

இலங்கை குழாம்

தனுஷ்க குணத்திலக்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், துனித் வெலால்கே, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (அணித்தலைவர்), ஜெப்ரி வன்டர்செய், சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன

ஆஸி. குழாம் 

ஆரோன் பிஞ்ச் (தலைவர்), டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபச்சேனே, அலெக்ஸ் கெரி (விக்கெட் காப்பாளர்), ட்ராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மெதிவ் குஹ்னமேன், பெட் கம்மின்ஸ், ஜை றிச்சர்ட்சன், ஜோஷ் ஹேசல்வூட்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணத்திலக்க ஆகியோருடன் துடுப்பாட்டத்தினைத் தொடங்கிய இலங்கை அணிக்கு மெதிவ் குஹ்னமேன் நெருக்கடி உருவாக்கினார். இதனால் பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட் அவர் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் வீழ்த்தப்பட்டது. இதனையடுத்து இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக தனுஷ்க குணத்திலக்க தனது விக்கெட்டினை 18 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பேட் கம்மின்ஸிடம் பறிகொடுத்தார்.

>>இலங்கை A அணிக்கெதிராக இரண்டாவது அரைச் சதமடித்த ஜோஷ் பிலிப்

அதன் பின்னர் தனன்ஞய டி சில்வா – குசல் மெண்டிஸ் ஜோடி இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 61 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டும் பேட் கம்மின்ஸின் பந்துவீச்சில் பறிபோனது. இலங்கை அணியின் 4ஆம் விக்கெட்டாக ஆட்டமிழந்த தனன்ஞய டி சில்வா 41 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்களை எடுத்தார்.

தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டினை அடுத்து குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களுடன் தனது விக்கெட்டினை கிளன் மெக்ஸ்வெலின் பந்துவீச்சில் பறிகொடுத்தார். குசல் மெண்டிஸின் பின்னர் தசுன் ஷானக்க மாத்திரம் சற்று பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த நிலையில், இலங்கை அணி 47.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டதோடு, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தசுன் ஷானக்க 5 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் எடுத்திருக்க, பின்வரிசையில் ஆடிய துனித் வெலால்கே 20 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, கிளன் மெக்ஸ்வெல் மற்றும் அறிமுக வீரர் மெதிவ் குஹ்னேமன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு டக்வெத் லூயிஸ் முறையில் 43 ஓவர்களுக்கு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆரம்பவீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் களம் வந்தனர்.

இந்த வீரர்களில் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டாக ஆரோன் பின்ச் தனன்ஞய டி சில்வாவின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் டேவிட் வோர்னர் அவுஸ்திரேலிய அணியினை தொடர்ந்து பலப்படுத்தியதோடு 5 பௌண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை எடுத்து தனன்ஞய டி சில்வாவின் பந்துவீச்சில் பறிபோன அடுத்த விக்கெட்டாக மாறினார்.

இதன் பின்னர் அவுஸ்திரேலிய அணி இலங்கை பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சு காரணமாக துரித கதியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதும் கிளன் மெக்ஸ்வெல் வெற்றிக்காக தன்னால் முடிந்த போராட்டத்தினை வழங்கியிருந்தார். தொடர்ந்து சாமிக்க கருணாரட்னவின் பந்துவீச்சோடு மெக்ஸ்வெலின் முயற்சி வீணாக, அவுஸ்திரேலிய அணி 37.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 189 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் கிளன் மெக்ஸ்வெல் 25 பந்துகளுக்கு 5 பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களை எடுத்தார்.

இதேநேரம் இலங்கை அணியின் பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற துனித் வெலால்கே, தனன்ஞய டி சில்வா மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக சாமிக்க கருணாரட்ன தனது அபார ஆட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டார்.

இனி இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் விளையாடும் ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

முடிவு – இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result


Sri Lanka
220/9 (47.4)

Australia
189/10 (37.1)

Batsmen R B 4s 6s SR
Dhanushka Gunathilake c matthew kuhemann b Pat Cummins 18 30 1 0 60.00
Pathum Nissanka c alex carey b matthew kuhemann 14 17 3 0 82.35
Kusal Mendis c & b Glenn Maxwell 36 41 2 1 87.80
dhananjaya de silva c alex carey b Pat Cummins 34 41 2 1 82.93
Charith Asalanka c matthew kuhemann b Glenn Maxwell 13 27 1 0 48.15
Dasun Shanaka c Glenn Maxwell b Mitchell Swepson 34 31 5 0 109.68
Chamika Karunaratne c Pat Cummins b matthew kuhemann 18 17 0 1 105.88
Dunith Wellalage b Pat Cummins 20 35 1 1 57.14
Jeffery Vandersay c alex carey b Pat Cummins 7 10 0 0 70.00
Dushmantha Chameera not out 7 18 1 0 38.89
Maheesh Theekshana not out 11 14 1 0 78.57


Extras 8 (b 0 , lb 5 , nb 0, w 3, pen 0)
Total 220/9 (47.4 Overs, RR: 4.62)
Bowling O M R W Econ
Josh Hazlewood, 7 1 26 0 3.71
matthew kuhemann 10 0 48 2 4.80
Glenn Maxwell 10 2 35 2 3.50
Pat Cummins 8.4 0 35 4 4.17
Mitchell Swepson 10 0 58 1 5.80
Marnus Labuschagne 2 0 13 0 6.50


Batsmen R B 4s 6s SR
David Warner b dhananjaya de silva 37 51 5 0 72.55
Aaron Finch lbw b dhananjaya de silva 14 15 2 0 93.33
Steve Smith c Maheesh Theekshana b Chamika Karunaratne 28 35 3 0 80.00
travis head c Charith Asalanka b Dunith Wellalage 23 34 2 0 67.65
Marnus Labuschagne c Dasun Shanaka b Dunith Wellalage 18 30 0 0 60.00
alex carey run out () 15 20 1 0 75.00
Glenn Maxwell c Dasun Shanaka b Chamika Karunaratne 30 25 5 0 120.00
Pat Cummins c Dunith Wellalage b Dushmantha Chameera 4 6 1 0 66.67
Mitchell Swepson b Chamika Karunaratne 2 2 0 0 100.00
matthew kuhemann b Dushmantha Chameera 1 2 0 0 50.00
Josh Hazlewood, not out 4 3 1 0 133.33


Extras 13 (b 0 , lb 5 , nb 0, w 8, pen 0)
Total 189/10 (37.1 Overs, RR: 5.09)
Bowling O M R W Econ
Dushmantha Chameera 6.1 0 19 2 3.11
Maheesh Theekshana 8 0 44 0 5.50
dhananjaya de silva 6 0 26 2 4.33
Jeffery Vandersay 5 1 23 0 4.60
Chamika Karunaratne 7 0 47 3 6.71
Dunith Wellalage 5 0 25 2 5.00