Home Tamil அவுஸ்திரேலிய A அணிக்கு எதிராக சதத்தை தவறவிட்ட நுவனிந்து

அவுஸ்திரேலிய A அணிக்கு எதிராக சதத்தை தவறவிட்ட நுவனிந்து

Australia A Tour of Sri Lanka 2022

469

இலங்கை ஏ மற்றும் அவுஸ்திரேலிய A அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (15) நிறைவுக்கு வந்தது.

இதில் இலங்கை A கிரிக்கெட் அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் லஹிரு உதார அரைச்சதமடித்து அசத்த, பந்துவீச்சில் டோட் மெர்பி 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

சுற்றுலா அவுஸ்திரேலிய A அணிக்கும், இலங்கை A அணிக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி நேற்று (14) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய A அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதுஇவ்வாறிருக்க, போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் (15) இலங்கை A கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது.

இலங்கை A அணியின் சார்பில் பபசர வதுகே, மினோத் பானுக ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். மினோத் பானுக பானுக 11 ஓட்டங்களுடன் டோட் மெர்பியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் டக்அவுட் ஆகி வெளியேற, பபசர வதுகேவும் 30 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நெதன் மெக்அண்ட்ரூவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும், 4ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று ஓரளவு நம்பிக்கை கொடுத்தனர். இதில் 29 ஓட்டங்களைப் பெற்றிருந்த சதீர சமரவிக்ரம, மார்க் ஸ்டெக்கெட்டியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து நுவனிந்து பெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்த லஹிரு உதார அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர்.

இதில் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்த லஹிரு உதார 50 ஓட்டங்களுடனும், நுவனிந்து பெர்னாண்டோ 86 ஓட்டங்களுடனும் மெட் குஹ்னெமன்னின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும், இலங்கை A அணி 8 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போதிய வெளிச்சமிண்மை காரணமாக போட்டி தடைப்பட இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அவுஸ்திரேலிய A அணியின் பந்துவீச்சு சார்பில் டோட் மெர்பி 4 விக்கெட்டுகளையும், மெட் குஹ்னெமன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நாளை (15) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய A அணி – 379/10 (88.1) – ஜோஷ் பிலிப், 94, நெதன் மெக்அண்ட்ரூ 92, ஆரோன் ஹார்டி 62, மார்க் ஸ்டெக்கெட்டி 47, டில்ஷான் மதுஷங்க 4/64, சுமிந்த லக்ஷான் 3/59, லக்ஷித மானசிங்க 3/115

இலங்கை A அணி – 250/8 (71) – நுவனிந்து பெர்னாண்டோ 86, லஹிரு உதார 50, பபசர வதுகே 30, டோட் மெர்பி 4/52, மெட் குஹ்னெமன் 2/41

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result


Sri Lanka A Team
274/10 (79.1) & 249/10 (72)

Australia A Team
379/10 (88.1) & 212/5 (46)

Batsmen R B 4s 6s SR
Matt Renshaw b Dilshan Madusanka 2 11 0 0 18.18
Marcus Harris b Dilshan Madusanka 0 3 0 0 0.00
Henry Hunt b Dilshan Madusanka 0 8 0 0 0.00
travis head b Lakshitha Manasinghe 39 29 5 0 134.48
Nic Maddinson st Lahiru Udara b Lakshitha Manasinghe 14 37 3 0 37.84
Josh Philippe c Lahiru Udara b Suminda Lakshan 94 102 7 3 92.16
Aaron Hardie b Suminda Lakshan 62 83 5 0 74.70
Nathan McAndrew b Dilshan Madusanka 92 132 5 0 69.70
Mark Steketee b Suminda Lakshan 47 83 4 0 56.63
Todd Murphy b Lakshitha Manasinghe 1 12 0 0 8.33
Matthew Kuhnemann not out 11 33 1 0 33.33


Extras 17 (b 11 , lb 2 , nb 4, w 0, pen 0)
Total 379/10 (88.1 Overs, RR: 4.3)
Bowling O M R W Econ
Dilshan Madusanka 14.1 2 62 4 4.40
Nisala Tharaka 12 1 61 0 5.08
Lakshitha Manasinghe 28 2 115 3 4.11
Pramod Madushan 18 1 69 0 3.83
Suminda Lakshan 16 1 59 3 3.69
Batsmen R B 4s 6s SR
Pabasara Waduge c travis head b Nathan McAndrew 30 57 3 0 52.63
Minod Bhanuka lbw b Todd Murphy 11 27 1 0 40.74
Kamindu Mendis b Todd Murphy 0 8 0 0 0.00
Nuwanidu Fernando c Matt Renshaw b Matthew Kuhnemann 86 140 11 1 61.43
Sadeera Samarawickrama lbw b Mark Steketee 29 53 2 0 54.72
Lahiru Udara c Matt Renshaw b Matthew Kuhnemann 50 62 5 0 80.65
Suminda Lakshan c Josh Philippe b Todd Murphy 12 31 1 0 38.71
Lakshitha Manasinghe c Josh Philippe b Mark Steketee 35 61 6 0 57.38
Nisala Tharaka c & b Todd Murphy 0 3 0 0 0.00
prabath jayasuriya c Henry Hunt b Mark Steketee 10 26 1 0 38.46
Dilshan Madusanka not out 1 7 0 0 14.29


Extras 10 (b 7 , lb 3 , nb 0, w 0, pen 0)
Total 274/10 (79.1 Overs, RR: 3.46)
Bowling O M R W Econ
Mark Steketee 15.1 5 51 3 3.38
Aaron Hardie 8 2 29 0 3.62
Nathan McAndrew 13 4 38 1 2.92
Todd Murphy 23 7 67 4 2.91
Matthew Kuhnemann 14 2 41 2 2.93
travis head 6 0 38 0 6.33
Batsmen R B 4s 6s SR
Marcus Harris lbw b Lakshitha Manasinghe 32 39 5 0 82.05
Matt Renshaw lbw b prabath jayasuriya 32 36 1 0 88.89
Henry Hunt c Oshada Ferenado b Lakshitha Manasinghe 0 5 0 0 0.00
Nic Maddinson c b Suminda Lakshan 59 95 8 0 62.11
Josh Philippe b Dilshan Madusanka 69 70 10 0 98.57
jimmy peirson not out 13 23 1 0 56.52
Aaron Hardie not out 4 9 1 0 44.44


Extras 3 (b 2 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 212/5 (46 Overs, RR: 4.61)
Bowling O M R W Econ
Dilshan Madusanka 8 1 43 1 5.38
Nisala Tharaka 2 0 17 0 8.50
Lakshitha Manasinghe 17 0 83 2 4.88
prabath jayasuriya 13 4 45 1 3.46
Suminda Lakshan 5 1 16 1 3.20
Nuwanidu Fernando 1 0 6 0 6.00


Batsmen R B 4s 6s SR
Minod Bhanuka c Josh Philippe b Aaron Hardie 87 142 11 1 61.27
Pabasara Waduge lbw b Aaron Hardie 2 13 0 0 15.38
Kamindu Mendis c jimmy peirson b Nathan McAndrew 5 11 0 0 45.45
Nuwanidu Fernando c Aaron Hardie b Nathan McAndrew 3 18 0 0 16.67
Sadeera Samarawickrama c Nic Maddinson b Tanveer Sangha 105 145 9 0 72.41
Lahiru Udara c Josh Philippe b Aaron Hardie 2 15 0 0 13.33
Suminda Lakshan c Josh Philippe b Tanveer Sangha 23 39 3 0 58.97
Lakshitha Manasinghe b Tanveer Sangha 5 9 0 0 55.56
Nisala Tharaka c Todd Murphy b Nathan McAndrew 0 4 0 0 0.00
prabath jayasuriya c Aaron Hardie b Tanveer Sangha 9 18 1 0 50.00
Dilshan Madusanka not out 4 17 0 0 23.53


Extras 4 (b 4 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 249/10 (72 Overs, RR: 3.46)
Bowling O M R W Econ
Mark Steketee 12 1 50 0 4.17
Aaron Hardie 12 3 35 3 2.92
Nathan McAndrew 15 4 31 3 2.07
Todd Murphy 18 0 62 0 3.44
Tanveer Sangha 13 0 56 4 4.31
Nic Maddinson 2 0 11 0 5.50