தென்னாப்பிரிக்காவில் உலகக் கிண்ணம் ஆடுவது சாதகமே – அரவிந்த

443

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண தொடரை இலங்கையில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றியது , 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர்களுக்கு மிகவும் தேவையான  அனுபவத்தை  கொடுக்கிறது. எமது இளம் வீரர்கள் அந்த நன்மையைப் பெற வேண்டும் என இலங்கையின் முன்னாள்  தலைவரும் ஜாம்பவான் துடுப்பாட்டவீரருமான  அரவிந்த டி சில்வா டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

இலங்கை வீரர்கள் வெளிநாடுகளில் நடுநிலை விக்கெட்டுகளை வைத்து கிரிக்கெட் விளையாட வேண்டும், இளம் வீரர்கள்  இதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என  டி சில்வா கூறினார். அரவிந்த டி சில்வா 1996 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதமடித்து இலங்கையின் உலகக்கிண்ண வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவரது சிறப்பான கிரிக்கெட் பெறுபேறுகளின் அங்கீகாரமாக  சமீபத்தில் ஐசிசியால்  ஹோல் ஒப் பேம் (HALL OF FAME) கௌரவ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். 

நாங்கள் 1996 உலகக் கோப்பையை விளையாடுவதற்கு முன்பு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டோம்இதன் மூலம் அவுஸ்திரேலிய விக்கெட்டுகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இது உலகக் கோப்பையை வெல்ல எங்களுக்கு உதவியது. உள்நாட்டுப் போட்டிகளின் போது இலங்கையில் நல்ல விக்கெட்டுகளைப் பார்க்க முடியவில்லை, இதை மாற்ற வேண்டும். துனித் வெல்லாலகே போன்ற வீரர்கள் தனது திறமையை வளர்த்துக்கொள்ள நல்ல விக்கெட்டுகளில் விளையாட வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார் அரவிந்த டி சில்வா. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் விக்கெட்டுகள் எந்த வீரருக்கும் முன்னேற்றத்திற்கு தேவையான பயிற்சியை அளிக்கும், அதே வேளையில், சர்வதேச மைதான தன்மைகளின் அனுபவத்தை பெறுவது இளம் வீரரக்ளுக்கு மிகவும் முக்கியமானது. 

எங்களிடம் நல்ல இளம் வீரர்கள் உள்ளனர், அவர்கள் நன்றாகக் கவனிக்கப்பட வேண்டும் என முன்னாள் டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் கிரிக்கெட் வீரரான டி சில்வா தெரிவித்தார். ஒரு முறை தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா பின்னர் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினரானார். 

அரவிந்த டி சில்வா, அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மஹாநாம, அசங்க குருசிங்க மற்றும் ஹஷான் திலகர்த்ன ஆகியோர் பாடசாலையை விட்டு நேரடியாக தேசிய அணிக்குள் நுழைந்தனர் ஆனால் இன்று தேசிய அணிக்குள் நுழைவதற்கு பாடசாலை கிரிக்கெட் தரம் போதவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

 >>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<