மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சகீப் அல் ஹஸன்

42
SHAKIB AL HASSAN

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறைவீரரான சகீப் அல் ஹஸன் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி பங்களாதேஷ் நாட்டின் நீதிமன்றம் அவருக்கு கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. 

>>இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம்<<

பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் புரட்சிக்குப் பின்னர் பங்களாதேஷில் இருந்து வெளியேறி வேறு நாட்டில் வசித்து வரும் சகீப் அல் ஹஸன் பல சர்ச்சைகளினை அண்மையில் முகம் கொடுத்திருந்தார் 

இதன் அடுத்த கட்டமாக அவரின் மீது தற்போது காசோலை மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதோடு, சகீப் அல் ஹஸனுடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றனர் 

பங்களாதேஷின் முன்னணி வங்கிகளில் ஒன்றான IFIC வங்கி சார்பில் முன்வைக்கப்பட்ட காசோலை மோசடி முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சகீப் அல் ஹஸன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சகீப் அல் ஹஸன் சுமார் 41.4 மில்லியன் டக்கா (இலங்கை நாணயப்படி சுமார் 101.13 மில்லியன் ரூபாய்கள்) மோசடி செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

கடந்த ஆண்டு தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரோடு சகீப் அல் ஹஸன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் மீதிருந்த கொலைக்குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியிருந்தது. 

தற்போது தனது குடும்பத்தினருடன் ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வரும் சகீப் அல் ஹஸன் பங்களாதேஷிற்கு மீள திரும்புவதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<