உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இலங்கை வீரர்கள்

114

இன்று (04) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உடற்தகுதி சோதனையில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஐந்து பேரும் அதில் தேர்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ள தனுஷ்க, தனன்ஜய

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கு தகுதி பெற வேண்டுமெனில், அவர்கள் 2 கிலோமீட்டர் தூரத்தினை 8 நிமிடம் மற்றும் 35 செக்கன்களில் கடக்கின்ற உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைய வேண்டும் என முன்னதாக கூறப்பட்டிருந்தது. 

குறித்த உடற்தகுதி பரிசோதனை இன்று (04) நடைபெற்ற நிலையில் அந்த பரிசோதனையில் பங்கேற்ற இலங்கை அணியின் வீரர்களான தனுஷ்க குணத்திலக்க, தனன்ஞய டி சில்வா, நுவான் பிரதீப், தனன்ஞய லக்ஷான் மற்றும் இஷான் ஜயரட்ன ஆகிய வீரர்களே அதில் தேர்ச்சியடைந்திருக்கின்றனர்.

இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகும் ஹசான் திலகரட்ன

இதில் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணிக்காக விளையாடிய தனுஷ்க குணத்திலக்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் இந்த உடற்தகுதி சோதனையில் முன்னதாக தேர்ச்சியடையாதிருந்த நிலையில், தற்போது சிறந்த முடிவுகளை காட்டியிருப்பதால் அவர்களுக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடும் வாய்ப்பு உருவாகியிருக்கின்றது. 

இம்மாத நடுப்பகுதியில் இங்கிலாந்து செல்லும் இலங்கை அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவிருப்பதோடு, இந்த சுற்றுத்தொடருக்கான 24 பேர் அடங்கிய இலங்கைக் குழாம் விரைவில் அறிவிக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…