இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகும் ஹசான் திலகரட்ன

Sri Lanka Women's Cricket

120

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக, இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான ஹசான் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹசான் திலகரட்ன 2000ம் ஆண்டு தன்னுடைய ஓய்வை அறிவித்த நிலையிலிருந்து, இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்புடைய பல்வேறு பணிகளை புரிந்துள்ளார். அதிகமாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இவர் செயற்பட்டதுடன், கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி 10வது இடத்தை பிடித்துக்கொண்டது.

உலகக் கிண்ணத்திற்காக 14 அணிகளை தெரிவு செய்யவுள்ள ICC

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு 2020 மற்றும் 2021ம் ஆண்டு பருவகாலங்கள் மிகவும் பரபரப்பான பருவகாலங்களாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதும், கொவிட்-19 தொற்று காரணமாக அனைத்து போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டன. இறுதியாக இலங்கை மகளிர் அணி கடந்த வருடம் மார்ச் மாதம் T20I உலகக்கிண்ணத்தில் விளையாடியுள்ளது. அதன் பின்னர், எந்தவொரு போட்டி தொடரிலும் இலங்கை மகளிர் அணி இதுவரை விளையாடவில்லை.

ஐசிசி மகளிர் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் அணிகளில், இலங்கை மகளிர் அணி மாத்திரமே இதுவரை, எந்த ஒரு சர்வதேச தொடர்களிலும் விளையாடவில்லை.

அதேநேரம், இலங்கை மகளிர் அணிக்காக இதுவரையிலும் எந்தவொரு போட்டி தொடர்களுக்கான அட்டவணையும் வெளியாகவில்லை. குறிப்பாக இந்த வருட இறுதியில், 2022ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் இலங்கையில் நடத்தப்படவுள்ளன. குறித்த இந்த தொடர் கடந்த வருடம் நடத்தப்படவிருந்த நிலையில், கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்பட்டது.

இதேவேளை, இலங்கை மகளிர் அணி 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டிகளில் இவ்வருடம் விளையாடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…