அவுஸ்திரேலிய அணியின் தலைவராக அலெக்ஸ் கெரி நியமனம்

113
 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் தலைவராக அலெக்ஸ் கெரி நியமிக்கப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஆரோன் பின்ச் செயற்பட்டுவந்த போதும், அவருடைய முழங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தோல்விக்கான காரணத்தை கூறும் சாமிக்க!

ஆரோன் பின்ச் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இறுதி T20I போட்டியின் போது, உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், குறித்த உபாதைக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், அடுத்தடுத்த நாட்களில் இவரது உபாதை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், புதிதாக அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அலெக்ஸ் கெரி ஏற்கனவே, அடிலெய்ட் ஸ்ரைக்கர், அவுஸ்திரேலியா ஏ மற்றும் சௌத் அவுஸ்திரேலியா ரெட்பேக்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்ததுடன், முதன்முறையாக அவுஸ்திரேலிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அலெக்ஸ் கெரி கருத்து வெளியிடுகையில், “ஆரோன் பின்ச் உபாதையிலிருந்து குணமாகும் வரை அணியின் தலைவராக செயற்படுவதை பெருமையாக கருதுகிறேன். அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்படுவது மிகப்பெரிய கௌரவம் என்பதுடன், அதற்காக நன்றிகூறுகிறேன். 

ஆரோன் பின்ச் எமது அணித்தலைவர். எனவே, அவர் முழு உடற்தகுதியை பெற்று அணிக்கு திரும்பவேண்டும். அவர் அணிக்கு திரும்பும் வரையில், சிறந்த தரத்திலான தலைமைத்துவ பணியை செயற்படுத்த விரும்புகிறேன். மேற்கிந்திய தீவுகள் அணி மிக சவாலான அணியாக உள்ளது. எனவே, இந்த அணிக்கு எதிராக தலைவராக செயற்படவுள்ளமையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<