மகளிருக்கான உயர்செயற்திறன் நிலையத்தை நிறுவிய இலங்கை கிரிக்கெட்

100
Sri Lanka Women’s Cricketers

இலங்கையின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்காக பிரத்தியேக கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையம் (High Perfomance Center) ஒன்று  நிறுவப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்திருக்கின்றது. 

இந்த உயர் செயற்திறன் நிலையம் இலங்கையில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டினை விருத்தி செய்கின்ற நோக்கில் நிறுவப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபையானது குறிப்பிட்டிருக்கின்றது.

>> கெய்ல் இலங்கைக்கு எதிராக களமிறங்கும் வாய்ப்பு!

இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் தமிழ் யூனியன் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இந்த உயர் செயற்திறன் நிலையம், P. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கையின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் P. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த உயர் செயற்திறன் நிலையத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைக் கொண்டு தமது கிரிக்கெட் விளையாட்டினை விருத்தி செய்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த உயர் செயற்திறன் நிலையம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, இதன் மூலம் மகளிர் கிரிக்கெட் வேறு ஒரு சிறந்த நிலைக்கு உயர எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார். 

>> இம்ரான் கானிடமிருந்து இலங்கை வீரர்களுக்கு முக்கிய அறிவுரை

நாங்கள் இந்த உயர் செயற்திறன் நிலையத்தின் மூலம் மகளிர் கிரிக்கெட்டினை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றோம்.“

அதேநேரம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்றான மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் விரைவில் நடைபெறவிருக்கும் சந்தர்ப்பத்தில், இந்த உயர்செயற்திறன் நிலையம் அமைக்கப்பெற்றிருப்பதால் அது இலங்கையின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக மாறியிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<