இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் “Signature” நிறுவனம்

58

இலங்கை கிரிக்கெட்டின் (SLC) உத்தியோகபூர்வ Formal & Casual ஆடைப்பங்களர்களாக (Formal & Clothing Partner) இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை நிறுவனமான Signature நிறுவனம் மாறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவை வைட்வொஷ் செய்து புது சரித்திரம் படைத்த நியூசிலாந்து

இதற்கு அமைய 2024 தொடக்கம் 2027 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் கிரிக்கெட் அணிகளுக்கு, Signature நிறுவனம் Formal & Casual ஆடைப்பங்களர்களாக செயற்படவிருக்கின்றது. 

அதாவது குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையின் ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் தொடர்களில் Formal & Casual ஆடைகளாக Signature நிறுவனத்தின் ஆடைகளே வழங்கப்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இலங்கை கிரிக்கெட்டுடன் Signature நிறுவனம் கைகோர்த்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரியான ஏஷ்லி டி சில்வா, தம்முடன் இணைந்ததன் மூலம் Signature என்னும் வியாபார நாமம் மிகச் சிறந்த சந்தையொன்றுக்கு சென்றடையும் எனக் குறிப்பிட்டார். 

மறுமுனையில் Signature நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான (Director of Signature) அம்ஜாட் ஹமீட் இந்த இணைப்பு மூலம் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருப்பது தமக்கு பெருமை தருவதாக குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 1990ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதில்  இருந்து Signature வியாபார நாமத்தின் ஆடவர்களுக்கான ஆடைகள் இலங்கையில் பிரபல்யமிக்கதாக காணப்படுவதோடு, அவை சிறந்த தரத்திற்கும் பெயர் போனவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<