ஆப்கான் வீரர் ஷபிகுல்லாவுக்கு ஆறு வருட தடை

63

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஷபிகுல்லா ஷபிக்குக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 வருடங்கள் தடை விதிக்க அந்நாட்ட கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.    

உமர் அக்மலுக்கு 3 வருடங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை

வழமையாக சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளும் ……

30 வயதான ஷபிகுல்லா ஷபிக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உட்பட 430 ஓட்டங்களையும், 46 டி20 போட்டிகளில் விளையாடி 494 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.   

இறுதியாக கடந்த 2019 செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணியுடனான டி20 போட்டியில் அவர் விளையாடி இருந்தார். இந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளூர் போட்டிகளிலும், வெளிநாட்டு டி20 தொடர்களிலும் பங்கேற்று வந்தார். 

இதனிடையே, கடந்த வருடம் நடைபெற்ற பங்காளதேஷ்  ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் போது அவர் சூதாட்ட தரகர்களிடம் பணம் பெற்றுக்கொள்ள முயற்சித்தது விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.  

IPL போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு இராட்சியம் கோரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள……

குறித்த விசாரணையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதுடன், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் சக அணி வீரர் ஒருவரை சூதாட்டத்தில் ஈடுபட செய்ய அணுகி இருக்கிறார் என்பதும் தெரியவந்தது.  

இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் 4 வகையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தன் மீதான புகாரை அவரும் ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடவடிக்கைகள் குழு அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 வருடங்கள் தடை விதித்து நேற்று (10) உத்தரவிட்டது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரி சயித் அன்வர் ஷா கருத்து வெளியிடுகையில்

”இது மிக தீவிரமான குற்றம். ஒரு மூத்த தேசிய அணி வீரர் 2018இல் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.  

விசாரணைக்கு முகங்கொடுக்கவுள்ள உமர் அக்மல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் அந்நாட்டு  ….

மேலும், 2019 பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் சக வீரரை குற்றச் செயலில் ஈடுபட அழைத்து அதில் தோல்வி அடைந்துள்ளார்” என அவர் மீதான மற்றொரு புகாரையும் கூறினார்

இந்த நிலையில், ஷபிகுல்லா ஷபிக் ஆரம்பத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. குற்றத்தை ஒப்புக் கொள்ளவும் மறுத்துள்ளார். அதனால், அவருக்கு இன்னும் அதிக தண்டனை கூட வழங்கி இருக்க முடியும் என அவர் தெரிவித்தார்

மேலும், குற்றத்தில் ஈடுபட்டு அதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கண்டுபிடிக்காது என நினைத்துக் கொண்டு இருக்கும் அந்த கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இது விழிக்க வேண்டிய தருணம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<