T20 உலகக்கிண்ணம் நடைபெறவுள்ள மைதானங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு

T20 World Cup 2024

173

உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகளின் மைதானங்கள் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி மேற்கிந்திய தீவுகளின் 7 மைதானங்களில் உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அமெரிக்காவின் 3 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி அமெரிக்காவின் புளோரிடா, நியூவ் யோர்க் மற்றும் டல்லாஸ் போன்ற இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

மேற்கிந்திய தீவுகளை பொருத்தவரை ஆண்டிகா மற்றும் பார்புடா, பார்படோஸ், டொமினிகா, கயானா, செய்ண்ட் லூசியா, சென் வின்சண்ட் மற்றும் கிரேனாடின்ஸ் மற்றும் ட்ரினிடட் மற்றும் டொபேகோவில் உலகக்கிண்ண போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இருபது அணிகள் பங்கேற்கும் T20 உலகக்கிண்ணத் தொடரானது அடுத்த ஆண்டு ஜூன் 4ம் திகதி முதல் ஜூன் 31ம் திகதிவரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<