Home Tamil சாதனை வெற்றியோடு உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் சம்பியனான இலங்கை

சாதனை வெற்றியோடு உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் சம்பியனான இலங்கை

1232

ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தினை 128 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தொடரின் சம்பியன்களாக நாமம் சூடியிருக்கின்றது.

>>ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரின் சம்பியனாகுமா இலங்கை?

மேலும் இந்த வெற்றியுடன் தொடரில் எந்தப் போட்டிகளிலும் தோல்வியுறாமல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் எதிரணிகளின் அனைத்து விக்கெட்டுக்களையும், தொடர்ச்சியாக 10 தடவைகள் கைப்பற்றி வெற்றி பெற்ற அணியாக புதிய மைல்கல் ஒன்றினை நிலைநாட்டியிருப்பதோடு, தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் 10ஆவது வெற்றியினையும் பதிவு செய்திருக்கின்றது.

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி முன்னதாக ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியிருந்தது.

இப்போட்டிக்கான இலங்கை அணி திமுத் கருணாரட்னவிற்கு உபாதை சிக்கல்கள் காரணமாக ஓய்வு வழங்க, தனன்ஞய டி சில்வா மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் இலங்கை குழாத்திற்குள் மீண்டிருந்தனர். மறுமுனையில் நெதர்லாந்து இப்போட்டியில் நோவா குரோஸிற்கு ஒருநாள் அறிமுகம் வழங்கியிருந்தது.

இலங்கை குழாம்

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), சஹான் ஆராச்சிகே, தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, டில்சான் மதுசங்க, மதீஷ பத்திரன

நெதர்லாந்து குழாம்

விக்ரமஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பரேஸி, நோவா குரோஸ், தேஜா நிடாமனுரு, ஸ்கொட் எட்வார்ட்ஸ் (தலைவர்), சகீப் சுல்பிகார், லோகன் வான் பீக், ஆர்யான் தத், கிளய்டன் ப்ளோய்ட், ரியான் கிளய்ன்

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தினை பெற்ற பின்னர் தமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் இருவரினையும் விக்ரமஜித்தின் வேகத்தில் பறிகொடுத்தது. ஆரம்பவீரர்களில் ஒருவராக களமிறங்கிய சதீர சமரவிக்ரம 19 ஓட்டங்களுடனும், பெதும் நிஸ்ஸங்க 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக குசல் மெண்டிஸ், சஹான் ஆராச்சிகே ஜோடி பொறுப்பான முறையில் ஆடி அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக 72 ஓட்டங்களைப் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் 52 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்தார். குசல் மெண்டிஸின் பின்னர் சஹான் ஆராச்சிகே தன்னுடைய கன்னி ஒருநாள் அரைச்சதத்துடன் இலங்கைத் தரப்பினை பலப்படுத்தியதோடு இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக சரித் அசலன்கவுடன் இணைந்து 64 ஓட்டங்களையும் இணைப்பாட்டமாக பகிர்ந்தார்.

இதனையடுத்து ஷகீப் சுல்பிகாரின் சுழல் பந்துவீச்சில் ஆட்டமிழந்த சஹான் ஆராச்சிகே 71 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்திருந்தார். சஹான் ஆராச்சிகேவின் பின்னர் சரித் அசலன்க உட்பட 3 விக்கெட்டுக்களை துரித கதியில் இழந்த இலங்கை அணி 190 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்த சரித் அசலன்க 36 ஓட்டங்களை எடுத்திருக்க, அணித்தலைவர் தசுன் ஷானக்க ஒரு ஓட்டத்தினையும், தனன்ஞய டி சில்வா 4 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

>>இலங்கை – பாகிஸ்தான் தொடர்; டிக்கெட் கொள்வனவு செய்வது எப்படி?

இதன் பின்னர் வனிந்து ஹஸரங்க வெளிப்படுத்திய சிறு அதிரடியோடு இலங்கை கிரிக்கெட் அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் வனிந்து ஹஸரங்க 21 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்கள் எடுத்தார். மகீஷ் தீக்ஷன 13 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் லோகன் வான் பீக், றயான் கிளெய்ன், விக்ரமஜித் சிங் மற்றும் ஷகீப் சுல்பிகார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 234 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி இலங்கை பந்துவீச்சாளர்களான டில்சான் மதுசங்க, வனிந்து ஹஸரங்க மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோரினை சமாளிப்பதில் தொடக்கத்தில் இருந்தே சிரமம் கண்டதோடு 23.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 105 ஓட்டங்களுடன் போட்டியில் படுதோல்வி அடைந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மகீஷ் தீக்ஷன 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, டில்சான் மதுசங்க 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர். நெதர்லாந்து துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மெக்ஸ் ஓடோவ்ட் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான டில்சான் மதுசங்க தெரிவாகினார். தொடர் நாயகன் விருது ஜிம்பாப்வே அணியின் சகலதுறைவீரர் சோன் வில்லியம்ஸிற்கு வழங்கப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
233/10 (47.5)

Netherland
105/10 (23.3)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Aryan Dutt b Vikramjit Singh 23 33 3 0 69.70
Sadeera Samarawickrama c Noah Croes b Vikramjit Singh 19 23 4 0 82.61
Kusal Mendis lbw b Saqib Zulfiqar 43 52 5 1 82.69
Sahan Arachchige c Logan van Beek b Saqib Zulfiqar 57 71 4 0 80.28
Charith Asalanka run out (Logan van Beek) 36 36 4 0 100.00
Dhananjaya de Silva b Ryan Klein 4 8 0 0 50.00
Dasun Shanaka c Vikramjit Singh b Logan van Beek 1 2 0 0 50.00
Wanindu Hasaranga c Max O’Dowd b Ryan Klein 29 21 2 1 138.10
Mahesh Theekshana st Scott Edwards b Aryan Dutt 13 30 0 0 43.33
Matheesha Pathirana c Noah Croes b Logan van Beek 4 11 1 0 36.36
Dilshan Madushanka not out 0 0 0 0 0.00


Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 233/10 (47.5 Overs, RR: 4.87)
Bowling O M R W Econ
Logan van Beek 10 0 40 2 4.00
Ryan Klein 9 1 42 2 4.67
Aryan Dutt 9.5 0 51 1 5.37
Vikramjit Singh 4 0 12 2 3.00
Clayton Floyd 5 0 28 0 5.60
Saqib Zulfiqar 10 1 59 2 5.90


Batsmen R B 4s 6s SR
Vikramjit Singh c Charith Asalanka b Dilshan Madushanka 13 14 3 0 92.86
Max O’Dowd b Mahesh Theekshana 33 63 1 1 52.38
Wesley Barresi b Dilshan Madushanka 0 6 0 0 0.00
Teja Nidamanuru lbw b Wanindu Hasaranga 0 2 0 0 0.00
Noah Croes lbw b Dilshan Madushanka 7 6 1 0 116.67
Scott Edwards run out (Kusal Mendis) 1 3 0 0 33.33
Saqib Zulfiqar lbw b Wanindu Hasaranga 6 7 1 0 85.71
Logan van Beek not out 20 24 1 0 83.33
Ryan Klein lbw b Mahesh Theekshana 2 7 0 0 28.57
Aryan Dutt lbw b Mahesh Theekshana 0 2 0 0 0.00
Clayton Floyd lbw b Mahesh Theekshana 9 7 2 0 128.57


Extras 14 (b 4 , lb 1 , nb 0, w 9, pen 0)
Total 105/10 (23.3 Overs, RR: 4.47)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 7 1 18 3 2.57
Mahesh Theekshana 6.3 1 31 4 4.92
Wanindu Hasaranga 7 1 35 2 5.00
Matheesha Pathirana 3 0 16 0 5.33



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>