உமர் அக்மலுக்கு 3 வருடங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை

83
Getty Images

வழமையாக சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளும் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரரான உமர் அக்மலுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் சபை (PCB) அடுத்த 3 வருடங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் எதிலும் விளையாட முடியாதவாறு தடைவிதித்துள்ளது.

விசாரணைக்கு முகங்கொடுக்கவுள்ள உமர் அக்மல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும்…………..

இந்த ஆண்டுக்கான (2020) பாகிஸ்தான் சுபர் லீக் T20 தொடர் நடைபெற முன்னர், உமர் அக்மலினை சூதாட்டத் தரகர்கள் அணுகியதாக தகவல்கள் வெளியாகின. இந்த விடயம் தொடர்பில் பாகிஸ்தானின் கிரிக்கெட் சபை உமர் அக்மலிடம் விளக்கம் கோரியிருந்தது. எனினும், அக்மலிடம் இருந்து இது தொடர்பில் பூரண ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 

இன்னும், இந்த விடயம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விளக்கம் ஒன்றினை வழங்கவும் அக்மலுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கும் அக்மல் சரியான பதில் ஒன்றை வழங்க தவறியிருந்தார். இவ்வாறான நிலையிலையே அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அடுத்த 3 வருடங்களிலும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதித்திருக்கின்றது.  

ஓய்வு பெறும் பாகிஸ்தானின் மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம்

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்………………

உமர் அக்மல் தொடர்பான விடயம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவினால் விசாரணை செய்யப்பட்டிருந்ததோடு, ஊழல் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியான நீதிபதி பஷால்-ஈ-மீரான், இந்த விடயத்தில் உமர் அக்மலினை குற்றவாளியாக இனம்கண்டு 3 வருட போட்டித் தடையினை வழங்கியிருந்தார்.

இதேநேரம், இந்த சூதாட்டப் பிரச்சினை காரணமாக ஏற்கனவே இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடரிலும் விளையாடாது போன உமர் அக்மலுக்கு, தற்போது 29 வயதாக இருக்கும் காரணத்தினால் அவர் 3 வருட போட்டித் தடைக்குப் பின்னர் பாகிஸ்தானின் தேசிய அணிக்காக மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

உமர் அக்மல் சூதாட்டப் பிரச்சினையில் சிக்க முன்னர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உடற்தகுதிப் பரிசோதனைகளுக்கு சரியான முறையில் ஒத்துழைக்காது போன விடயம் ஒன்று தொடர்பிலும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருந்ததோடு, பாகிஸ்தானின் தலைமைப் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆத்தரினை விமர்சித்த விடயம் தொடர்பிலும் குற்றவாளியாக இனம் காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக 2019ஆம் ஆண்டு லாஹூரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற T20 போட்டி மூலம் பாகிஸ்தானை பிரதிநிதித்துவம் செய்திருந்த உமர் அக்மல் இதுவரை தனது நாட்டுக்காக 223 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<