விசாரணைக்கு முகங்கொடுக்கவுள்ள உமர் அக்மல்!

46
espncricinfo
 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் அந்நாட்டு வீரர் உமர் அக்மல் ஆகியோருக்கு முன்னாள் நீதிபதியும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழுவின் தலைவருமான பஸால்-ஏ-மிரான் அழைப்பு விடுத்துள்ளார். 

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும், 27ம் திகதி பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு இவர்கள் சமுகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

IPL கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டின்…..

உமர் அக்மல், சூதாட்ட விடயங்கள் தொடர்பிலான முழுமையான தகவல்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவிடம் தெரிவிக்க மறுத்தமை தொடர்பில் இரண்டு பிரிவுகளில் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.  

முன்னரும் சூதாட்ட விடயங்கள் தொடர்பில் 2020ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) T20 தொடரில் விளையாட தடையினைப் பெற்றுக் கொண்ட 29 வயது நிரம்பிய அக்மலிற்கு தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் விளக்கம் தர 14 நாட்கள் வரையில் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், அடுத்தக்கட்ட விசாரணைகளை நடத்தும் பொருட்டு, எதிர்வரும் 27ம் திகதி கிரிக்கெட் சபை மற்றும் உமர் அக்மலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள இந்த விசாரணையில், தற்போது உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட்-19 வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, விசாரணையின் போது, சமுக இடைவெளி பயன்படுத்தப்படும் எனவும், அதற்கேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

உமர் அக்மல் இறுதியாக இலங்கை அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் தேசிய அணிக்கான போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

அதேநேரம், உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட், 121 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<