தெற்காசிய கால்பந்து சம்மேளனம் (SAFF) ஒழுங்கு செய்து நடாத்தும் 15ஆவது பருவத்திற்கான SAFF கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை கால்பந்து குழாம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இந்தியாவிற்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் குழாம் வெளியீடு
நாளை (5) தொடக்கம் பங்களாதேஷின் டாக்காவில் ஆரம்பமாகும் 15ஆவது பருவத்திற்கான SAFF கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் நவம்பர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த இலங்கையுடன் சேர்த்து மொத்தம் ஆறு நாடுகள் சம்பியன் பட்டத்திற்காகக் களம் காண்கின்றன.
இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு A பிரிவில் பங்களாதேஷ், இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய அணிகளும், குழு B பிரிவில் நடப்பு சம்பியனான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.
குழுநிலைப் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டி நவம்பர் 17ஆம் திகதி நடைபெறுகின்றது.
இம்முறைக்கான தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் முதன் முறையாக அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் நடுவர்களுக்கு உதவும் VAR தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவிருக்கின்றது.
இலங்கை கால்பந்து குழாம்
சுஜான் பெரேரா (கோல்காப்பாளர் & தலைவர்), கவீஷ பெர்னாண்டோ (கோல்காப்பாளர்), மொஹம்மட் முர்ஷித் (கோல்காப்பாளர்), மொஹம்மட் ஹஸ்மீர், முகம்மது முன்சிப், சலன சமீரா, ஜூட் சுபன், ஜேசன் தயாபரன், ஜெரெமி பெரேரா, வில்லியம் தாமசன், அனுஜன் ராஜேந்திரம், கிளாடியோ கம்மர்க்கனெக்ட், பரத் சுரேஷ், ஸ்டீவன் சகாயராட்ஜி, லியோன் பெரேரா, ஆதவன் ராஜமோகன், கரெட் கெல்லி, நிலோஷன் செந்தூர்வாசன், ஒலிவர் கெலார்ட், டிலோன் டி சில்வா, சாமுவேல் டுரான்ட், வசீம் ரசீக், வேட் டெக்கர், ராகுல் சுரேஷ், முத்துக்குமாரு ரெமியன், அய்மான் ஜவாஹிர், ரெஜிஸ் கனிஸ்டன், அமான் பிசார்






















