42வது தேசிய விளையாட்டு விழாவில், முன்னைய சாதனைகளை முறியடித்த நிர்மலி மற்றும் இஷார

407
national sports festival second day

கிழக்கு மாகாணத்துக்காக தங்கப் பதக்கம் வென்ற மொஹமட் மிஃப்ரான்

யாழ்ப்பாணம், துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு விழா போட்டியில் இரண்டாம் நாள், மேலும் இரண்டு இலங்கை தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

சபரகமுவ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்மலி லியனாராச்சி 800M பெண்கள் ஓட்டப்போட்டியில், 24 வருடங்களுக்கு முன் 1992ம் ஆண்டு, பாசிலோனாவில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் தம்மிகா மேனிக்கே ஏற்படுத்தியிருந்த 2:03.85 வினாடி என்ற தேசிய சாதனையை 2:03.5 வினாடிகளில் ஓடி முடித்து புதிய சாதனையை ஏற்படுத்தினார். செயற்கை ஓடுகளத்தில் தம்மிகா மேனிக்கேவால் பதிவு செய்த இச்சாதனையை, மண்ணோடு கூடிய புற்தரை மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் நிர்மலி லியனாராச்சியால் முறியடிக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தேசிய மட்டத்தில் காயந்திக்கா அபேரத்ன 2:03.5 நேர சாதனையும் நிர்மலி லியனாராச்சி முறியடித்துள்ளார்.

ஆடவர் பிரிவில், இஷார சந்தருவன் தன்னுடை முன்னைய சாதனையான 5.00 மீட்டர் உயரத்தை, தானே 5.10 மீட்டர் உயரம் தாண்டி முறியடித்து, கோலூன்றி உயரம் தாண்டுதல் போட்டியின் மத்தியில் முத்திரைபதித்து பிரகாசித்தார். முதல் சுற்றின் போது, இஷார தாண்டியிருந்த 4.40 மீட்டர் உயரத்தை விட வெள்ளிப்பதக்கம் வென்ற கே.கே. பாலசூரிய 4.50 மீட்டர் உயரம் தாண்டி முன்னிலை பெற்றிருந்தார். மூன்று சுற்றுக்களில் 5.20 மீட்டர் உயரத்தை தாண்ட தடையாகவிருந்த மைதானத்தினுடாக வீசிய பலத்த காற்றின் மத்தியில், 5.10 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படைத்தார்.

ThePapare.com இற்கு பிரத்தியேகமாக பேசுகையில், “நான் உள ரீதியாக சிறந்த நிலையில் இருந்தேன், அத்துடன் என்னுடைய சாதனையை நானே முறியடிப்பேன் என்ற நம்பிக்கையும் என்னுள் இருந்தது” என தெரிவித்தார். அதே நேரம், வட மாகாணத்தைச் சேர்ந்த கே. கனதீபன் 4.40 மீட்டர் உயரம் தாண்டி, வெளிப்பதக்கம் பெற்றுக்கொண்டார். 

இரண்டாவது நாளான, 42வது தேசிய விளையாட்டு விழாவில், மாகாணளுக்கிடையிலான 4X100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தய போட்டியில் ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவுகள் தங்களுக்கிடையே கடுமையாக போட்டியிட்டுக்கொண்டனர். ஆடவர் பிரிவில், வட மத்திய மாகாணம் 41.6 வினாடிகளில் ஓடி முதலிடம் பெற்ற அதே நேரம், சபரகமுவ மாகாணம் ஒரு வினாடி இடைவெளியில், 41.7 வினாடிகளில் இரண்டாம் இடம் பெற்றது. அதே நேரம், பெண்கள் பிரிவு 4X100 மீட்டர் போட்டியில் மேல் மாகாண அணி 48.0 வினாடிகளில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றது.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மொஹமட் மிஃப்ரான் நீளம் தாண்டும் போட்டியில் 7.72 மீட்டர் பாய்ந்து தங்கப் பதக்கம் பெற்றுக்கொண்டார். K.M குமார 7.64 மீட்டர் மற்றும் மதுக லியனபதிரான 7.60 மீட்டர் பாய்ந்து முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

42வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாளான நாளை மாண்பு மிகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரகள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

உடனுக்குடன் யாழ்ப்பாணத்திலிருந்து போட்டிகளின் முடிவுகளை அறிந்துகொள்ள www.papare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்   

 இரண்டாம் நாள் முடிவுகள் 

  • ஆடவர் பிரிவு

கோலூன்றி உயரம் தாண்டுதல்

  1. இஷாரா சந்தருவான் (மேல் மாகாணம்) 5.10 மீட்டர் (புதிய தேசிய சாதனை)
  2. கே.கே. பாலசூரிய (வடமேல் மாகாணம்) 4.50 மீட்டர்
  3. கே. கனதீபன் (வட மாகாணம்) 4.40 மீட்டர்

800 மீட்டர்

  1. இந்துனில் ஹேரத் (ஊவா மாகாணம்) 1:51.9 வினாடி
  2. A.D. குமார (மேல் மாகாணம்) 1:52.3 வினாடி
  3. குபுன் குஷாந்த (ஊவா மாகாணம்) 1:52.9 வினாடி

குண்டெறிதல்

1. சமித ஜெயவர்தன (வடமேல் மாகாணம்) 14.69 மீட்டர்
2. T.M. ஆசிக் (கிழக்கு மாகாணம்) 13.79 மீட்டர்
3. H.C. பெர்டினான்டெஸ் (மேல் மாகாணம்) 13.64 மீட்டர்

4X100 மீட்டர்

1. வடமேல் மாகாணம் 41.6 வினாடி
2. தென் மாகாணம்         41.7 வினாடி
3. சப்ரகமுவ மாகாணம்    42.2 வினாடி

நீளம் பாய்தல்

1. மொஹமட் மிஃப்ரான் (கிழக்கு மாகாணம்) 7.72 மீட்டர்
2. K.M. குமார (வடமேல் மாகாணம்) 7.64 மீட்டர்
3. மடுக்க லியனபதிரான (மேல் மாகாணம்) 7.60 மீட்டர்

  • பெண்கள் பிரிவு

800 மீட்டர்

1. நிர்மலி லியனாராச்சி (சப்ரகமுவ மாகாணம்) 2:03.5 வினாடி (புதிய  தேசிய சாதனை)
2. காயந்திகா அபேரத்ன (தென் மாகாணம்) 2:03.7 வினாடி
3. A.D. சந்தகாந்தி (தென் மாகாணம்) 2:08.4 வினாடி

வட்டெறிதல்

1. ஆயிஷா மதுவந்தி (ஊவா மாகாணம்) 38.20 மீட்டர்
2. மதுரங்கி பெரேரா (மேல் மாகாணம்) 38.03 மீட்டர்
3. V.V. லக்மாலி (வடமத்திய மாகாணம்)

ஈட்டி எறிதல்

1. டில்ஹானி லேகமகே (சப்ரகமுவ மாகாணம்) 52.01 மீட்டர்
2. கௌசல்யா லக்மாலி (தென் மாகாணம்) 41.67 மீட்டர்
3. P.S. கிளரென்ஸ் (ஊவா மாகாணம்) 40.75 மீட்டர்

நீளம் பாய்தல்

  1. சாரங்கி சில்வா (மேல் மாகாணம்) 5.99 மீட்டர்
  2. A.D. தனஞ்சனி (தென் மாகாணம்) 5.85 மீட்டர்
  3. அஞ்சனி புலவன்ச (மேல் மாகாணம்) 5.76 மீட்டர்

4X100 மீட்டர்

1. மேல் மாகாணம் 48.0 வினாடி
2. தென் மாகாணம் 48.5 வினாடி
3. ஊவா மாகாணம் 49.5 வினாடி