இந்தியாவிற்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் குழாம் வெளியீடு

India tour of New Zealand 2026

1
India tour of New Zealand 2026

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் நியூசிலாந்து குழாம்கள் அந்த நாட்டு கிரிக்கெட் சபை (NZC) மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

>>முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியனாகிய பாகிஸ்தான்<<

இரு பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கும் அணிகளில் உபாதைகளில் இருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாத மார்க் சாப்மன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெறவில்லை. நியூசிலாந்து இந்தியாவுடன் ஆடிய  T20 தொடரிலும் உபாதைகள் காரணமாக இவர்கள் பங்கேற்கவில்லை.

அதேவேளை நவம்பர் 4ஆம் திகதி ஒக்லாண்டில் ஆரம்பமாகும் ஒருநாள் தொடருக்கு முன்னதாகவும் இருவரினாலம் போதிய உடற்தகுதியை நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றது.

முன்னதாக நடைபெற்ற T20 தொடரின் இறுதி இரண்டு போட்டிகளுக்குமான அணியில் உள்வாங்கப்பட்டிருந்த விக்கெட்காப்புதுடுப்பாட்டவீரர் டிம் செய்பார்ட், தற்போது முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.

அதேவேளை இடதுகைதுடுப்பாட்டவீரர் ஹென்ரி நிக்கோல்ஸ் மற்றும் சகலதுறைவீரர் டீன் பொக்ஸ்கிராப்ட் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் நிக்கோல்ஸ் முதல் மூன்று போட்டிகளுக்கும், பொக்ஸ்கிராப்ட் கடைசி இரண்டு போட்டிகளுக்குமான அணிகளில் இணைந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

அதேவேளை முன்னதாக கடைசி இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் மேட் பிஷர், இப்போது முதல் மூன்று போட்டிகளுக்கான அணியிலும் இணைக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் மேட் ஹென்ரி இந்திய ஒருநாள் தொடரில் ஆடுவது அவரது உடற்தகுதியியை கருத்திற் கொண்டே தீர்மானிக்கப்படும் கூறப்பட்டிருக்கின்றது.

முதல் மூன்று போட்டிகளுக்குமான நியூசிலாந்து அணி: மிச்சல் சான்ட்னர் (தலைவர்), மைக்கல் பிரஸ்வெல், டெவோன் கொன்வே, ஜேகப் டப்(f)பி, மேட் பிஷர், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டொம் லேதம் (விக்கெட்காப்பாளர்), டேரைல் மிச்சல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளன் பிலிப்ஸ், டிம் செய்பார்ட், நதன் ஸ்மித், வில் யங், ப்ளையர் டிக்னர்.

இறுதி இரண்டு (4&5) போட்டிகளுக்குமான அணி: மிச்சல் சான்ட்னர் (தலைவர்), பின் அலன், மைக்கல் பிரேஸ்வெல், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டப்(f)பி, மேட் பிஷர், டீன் பொக்ஸ்கிராப்ட், லோக்கி பெர்குஸன், மிச்சல் ஹேய் (விக்கெட்காப்பாளர்), நிக் கெல்லி, டிம் செய்பார்ட் (விக்கெட்காப்பாளர்), ப்ளையர் டிக்னர், வில் யங்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<