இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவியாக ஹர்சிதா சமரவிக்ரம நியமனம்

Women's Emerging Trophy 2026 

1

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒழுங்கு செய்துள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. இன் வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கான T20 கிரிக்கெட் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 14 பேர் அடங்கிய இலங்கை மகளிர் குழாம் வெளியிடப்பட்டுள்ளது.  

இந்தியாவிற்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் குழாம் வெளியீடு

கடந்த ஆண்டு முதன் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த தொடரானது இம்முறை 10 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டு நடைபெறும் நிலையில் இலங்கை குழு A இல் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, பபுவா நியூ கினியா மற்றும் தொடரினை நடாத்தும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுடன் நிரல்படுத்தப்பட்டுள்ளது.  

மறுமுனையில் குழு B பாகிஸ்தான், தொடரின் நடப்புச் சம்பியன் தாய்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றின் மகளிர் அணிகள் காணப்படுகின்றன.  

நவம்பர் 12 முதல் 25ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் அஜ்மான் நகரில் இடம்பெறவுள்ளதோடு, அங்கே காணப்படும் கார்வான் வி.க. மைதானம் மற்றும் செவன் டிஸ்ரிக்ட் வி.க. மைதானம் என்பவை போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

இந்த தொடருக்கான இலங்கை அணியினை முன்வரிசை துடுப்பாட்டவீராங்கனையான ஹர்சிதா சமரவிக்ரம வழிநடாத்த, கவீஷா டில்ஹாரி பிரதி தலைவியாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். இலங்கை இந்த தொடரின் முதல் போட்டியில் நவம்பர் 12ஆம் திகதி அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியினை எதிர்கொள்கின்றது. 

இலங்கை மகளிர் குழாம் 

 

சஞ்சனா கவிந்தி, இமேஷா துலானி, ஹாசினி பெரேரா, விஷ்மி குணரட்ன, ஹர்சிதா சமரவிக்ரம (தலைவி), கவிஷா டில்ஹாரி (பிரதி தலைவி), நிலக்ஷிகா சில்வா, கௌஷினி நுத்யங்கனா, சத்யா சந்தீபனி, ரஷ்மிகா செவ்வந்தி, சுகந்திகா குமாரி, சாமுதி ப்ரபோதா, மல்கி மதாரா, செத்தனா விமுக்தி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<