தொடரைக் கைப்பற்றியது சிம்பாப்வே அபிவிருத்தி அணி

216
nka Emerging XI vs Zimbabwe Emerging XI

ஹரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது  ஒருநாள் ஆட்டத்தின்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அபிவிருத்தி அணி சிம்பாப்வே அபிவிருத்தி அணிக்கு  முதலில் துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தது. 50 ஓவர்களை எதிர்கொண்ட சிம்பாப்வே அபிவிருத்தி அணி 9 விக்கட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது.

சிம்பாப்வே அபிவிருத்தி  அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரியன் சாரி 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் சிம்பாப்வே அணியின் விக்கட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இதன் மத்தியிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வோலர் 44 ஓட்டங்களையும், மும்பா ஆட்டம் இழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அபிவிருத்தி அணி சார்பாகப் பந்துவீச்சில் அனுக் பெர்னாண்டோ 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

255 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அபிவிருத்தி அணி 49.1 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்து தொடரை இழந்தது.

இலங்கை அபிவிருத்தி அணி சார்பில் அணித்தலைவர் புத்திக்க 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, அனுக் பெர்னாண்டோ 55 பந்துகளில் அரைச் சதம் கடந்து 52  ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சிம்பாப்வே அபிவிருத்தி அணியின் பிரியன் சாரி தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு  போட்டி  மீதமிருக்க 2-0 என்ற கணக்கில் சிம்பாப்வே அபிவிருத்தி அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

போட்டியின் சுருக்கம் –

சிம்பாப்வே அபிவிருத்தி அணி – 255/9 (50)

வொல்லெர் 44, மும்பா 40, சாரி 85

அணுக்  பெர்னாண்டோ46/3, அசலங்க 37/2

இலங்கை அபிவிருத்தி  அணி – 241 (49.1)

புத்திக்க 75, அணுக் பெர்னாண்டோ 52, துமிந்து 25

நயுச்சி 39/3, நயாதி 43/3, மும்பா 38/1