இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக தம்மிக்க சுதர்ஸன

India tour of Sri lanka 2021

168
 

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக, இலங்கை U19 அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் தம்மிக்க சுதர்ஸன நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேண்ட் பிளவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதால், U19 அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் தம்மிக்க சுதர்ஸன இந்திய அணிக்கு எதிரான தொடரில் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

ரிச்மண்ட் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட தம்மிக்க சுதர்ஸன, தற்போதைய காலப்பகுதியில் பாடசாலை கிரிக்கெட்டில் உள்ள மிகச்சிறந்த பயிற்றுவிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதன் காரணமாக அண்மையில் இலங்கை U19 கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன், இவர் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் மையத்தின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

எனவே, கிரேண்ட் பிளவர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைய காலம் எடுக்கும் என்பதால், இந்திய தொடருக்கான துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகும் வாய்ப்பு தம்மிக்க சுதர்ஸனவுக்கு கிடைத்துள்ளது.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர், எதிர்வரும் 18ம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…