மோசமான களத்தடுப்பினால் வாய்ப்பை தவறவிட்டோம்: குல்படின்

92
©Getty image

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடனான தோல்விக்கு களத்தடுப்பில் விட்ட தவறுகளே காரணம் என ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் குல்படின் நைப் தெரிவித்தார்.  

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று (24) நடைபெற்ற லீக் போட்டியில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.

ஆப்கானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ள பங்களாதேஷ்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 31………….

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ஓட்டகளை மாத்திரமே எடுத்து தோல்வியைத் தழுசியது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்குபற்றிய அணிகளில் மிகவும் வலிமை குறைந்த அணியாகவும், இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய அணியாகவும் ஆப்கானிஸ்தான் விளங்கினாலும், நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு சவால் கொடுத்து முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது

ஆனால், கடந்த போட்டிகளைப் போல நேற்றைய ஆட்டத்திலும் அந்த அணி துடுப்பாட்டத்திலும், களத்தடுப்பிலும் மோசமாக செயல்பட்டது

எனது வெற்றிக்கு கடின உழைப்பும், அதிஷ்டமும் காரணம் – சகிப்

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் ………

இந்த தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் குல்படின் நையிப் கருத்து வெளியிடுகையில்

”இந்தப் போட்டியில் நாங்கள் இரண்டு பிடியெடுப்புகளைத் தவறவிட்டோம். மேலும் 30-35 ஓட்டங்களை அதிகமாகக் கொடுத்தோம். ஆடுகளம் வேகம் குறைந்ததாக இருந்தது. ஆனால், துடுப்பாட்டத்திற்கு சிறந்த ஆடுகளமாக காணப்பட்டது. எனினும், அனைத்து கௌரவங்களும் சகிப் அல் ஹசனையே சாரும். அவர் நன்றாக பந்து வீசினார்

முதல் 10 ஓவர்களில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. ஷித் கான் பந்துவீச்சில் 100 சதவீத பங்களிப்பினை வழங்கியிருந்தார். அவர்களும் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு நாங்கள் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய போது இந்த ஓட்ட இலக்கை துரத்தியடிக்கலாம் என நினைத்தோம். அதேபோல எமது களத்தடுப்பானது மிகவும் மோசமாக இருந்தது. இதனால் ஷித் கானுக்கு விக்கெட் கைப்பற்றும் வாய்ப்பும் தவறவிடப்பட்டது” என்றார்

இதேநேரம், பங்களாதேஷ் அணிக்காக அபாரமாக விளையாடிய சகிப் அல் ஹசனின் சகலதுறை ஆட்டம் தொடர்பில் குல்படின் கருத்து தெரிவிக்கையில்

”சகிப் அல் ஹசன் உலகின் முதல்நிலை சகலதுறை ஆட்டக்காரர் ஆவார். அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது, எனவே அவர் அதிக நேரம் எடுத்து சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தார். மேலும், அவர்களது திட்டத்தின் படி நன்றாக பந்து வீசியிருந்தார்

உண்மையில் பங்களாதேஷ் அணி பந்துவீசிய போது ஆடுகளத்தில் எதிர்பார்த்தளவு மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆனாலும், சகிப் சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்”

இதேவேளை, முந்தைய போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என தெரிவித்த குல்படின், இதனால் சமிஉல்லாஹ் சின்வாரி மற்றும் ரஹ்மத் ஷா ஆகிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கியதாக குறிப்பிட்டார்.  

இதுஇவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியை 29ஆம் திகதியும், மேற்கிந்திய தீவுகள் அணியை ஜூலை 4ஆம் திகதியும் சந்திக்கவுள்ளது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<