கொக்குவில் இந்துவை இன்னிங்ஸால் வீழ்த்தியது யாழ். மத்தி

659

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு எதிராக நேற்றும் இன்றும் (19, 20) இடம்பெற்ற இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில், தேசிய அணியுடனான பயிற்சியிலிருக்கும் அணியின் முக்கிய வீரர் வியாஸ்காந்தினது சேவை இல்லாத போதும், யாழ் மத்திய கல்லூரி வீரர்கள் இன்னிங்ஸ் மற்றும் 179 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்திருக்கின்றனர்.

றோயல் கல்லூரியை இன்னிங்ஸால் வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நிறைவிற்கு வந்த பாணந்துறை றோயல்

19 வயதிற்குட்பட்ட, பிரிவு 3 பாடசாலை அணிகளுக்கிடையிலானசிங்கர் கிண்ணபோட்டித் தொடரின் முதலாவது சுற்றுப் போட்டியொன்றிற்காக இரு அணியினரும் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர்.

மோதலின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்த மத்திய கல்லூரி அணியினர் வெறுமனே 50 ஓட்டங்களிற்குள் கொக்குவில் இந்துவின் சகல விக்கெட்டுக்களினையும் பறித்தனர். மத்தியின் சார்பில் பந்துவீச்சில் இடது கை லெக் ஸ்பின் பந்துவீச்சாளரான விதுசன் 7 ஓட்டங்களினை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, மற்றொரு இடது கை லெக் ஸ்பின் பந்து வீச்சாளரான குகசதுஸ் 03 விக்கெட்டுக்களையும் தனதாக்கினார். எஞ்சிய 03 விக்கெட்டுக்களினையும் வலது கை ஓஃவ் ஸ்பின் பந்து வீச்சாளரான  நிதுசன் தனதாக்கினார்.  

Photos: Jaffna Central College vs Kokuvil Hindu College | Day 02 | Under 19 Division III

பின்னர் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி ராஜ்கிளின்ரன் மற்றும் ஜெயதர்சன் ஆகியோர் முறையே 73 மற்றும் 64 ஓட்டங்களினை பெற்றுக்கொடுக்க கொக்குவில் இந்துக் கல்லூரியினை விட 219 ஓட்டங்கள் முன்னிலையில் 269 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது.   

கொக்குவில் இந்துவின் சார்பில் பந்துவீச்சில் டினேஷ்குமார் 6 விக்கெட்டுக்களையும், கஜானன் 4 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

Photos : Jaffna Hindu College vs Hartley College, Point Pedro | Day 01 | Under 19 Division III

ThePapare.com | Ushanth Senthilselvan | 20/12/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be

தொடர்ந்து 219 ஓட்டங்கள் பின்னிலையில் இன்றைய தினம் தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த கொக்குவில் வீரர்களை மத்தியின் பந்துவீச்சாளர்கள் மீண்டுமொருமுறை அச்சுறுத்த வெறுமனே 40 ஓட்டங்களிற்கு அவர்கள் சகல விக்கெட்டுக்களினையும் பறிகொடுத்தனர். இதனால், போட்டியில் இலகு வெற்றிபெற்ற மத்திய கல்லூரி தொடரில் இரண்டாவது வெற்றியினை பதிவு செய்தது.

தொடர்ந்தும் அச்சுறுத்திய வடமாகாண அணி வீரர் விதுசன்  05 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, இயலரசன், நிதுசன் மற்றும் குகசதுஸ் ஆகியோர் முறையே 3, 11 மற்றும் 13 ஓட்டங்களிற்கு தலா 2 விக்கெட்டுக்களினை சாய்த்தனர்.

லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் விதுசன் போட்டியில் 12 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களையும், சக சுழற்பந்து வீச்சாளர்களான குகசதுஸ் மற்றும் நிதுசன் ஆகியோரும் தலா 5 விக்கெட்டுக்களினையும் தமதாக்கினர்.  அணியின் தலைவரும் பிரதான வேகப்பந்துவீச்சாளருமான மதுசன் வெறுமனே 3 ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார்.

வடக்கின் கிரிக்கெட் பலவான்களாக ஜோலித்துவரும் மத்திய கல்லூரி அணிக்கு சுழற்பந்துவீச்சு நடப்பாண்டில் மிகப்பெரும் பலமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டிச் சுருக்கம்  

கொக்குவில் இந்துக் கல்லூரி 50 (34) தீசன் விதுசன் 4/07, குகசதுஸ் 3/06, நிதுசன் 3/07  & 40 (44.5) விதுசன் 3/05, இயலரசன் 2/03, நிதுசன் 2/11, குகசதுஸ் 2/13 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி –  269 (83) ராஜ் கிளின்ரன் 73, ஜெயதர்சன் 64, இயலரசன் 36, நிதுசன் 29, டினேஷ் குமார் 6/66, கஜானன்  4/93

போட்டிமுடிவு – இன்னிங்ஸ் மற்றும் 179 ஓட்டங்களால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க