Home Tamil ஆப்கானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ள பங்களாதேஷ்

ஆப்கானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ள பங்களாதேஷ்

200

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 31ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது. 

சௌத்எம்ப்டன் நகரில் நேற்று (24) நடைபெற்ற இப்போட்டி மழையின் காரணமாக சற்று தாமதமாகவே ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் குல்படின் நயீப் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் அணிக்கு வழங்கினார். 

உலகக் கிண்ணத்திலிருந்து முழுமையாக வெளியேறும் அதிரடி வீரர் அன்ரூ ரசல்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான….

தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் மேற்கிந்திய தீவுகள் அணியினை தோற்கடித்த பங்களாதேஷ் அணி, உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கான வாய்பை தக்க வைக்க இப்போட்டியில் கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியது.

இப்போட்டிக்கான பங்களாதேஷ் அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்படி, மொஹமட் சயீபுத்தின், மொசாதிக் ஹொசைன் ஆகியோர் சபீர் ரஹ்மான் மற்றும் ருபெல் ஹொசைன் ஆகியோருக்கு பதிலாக பங்களாதேஷ் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால், செளம்யா சர்க்கார், சகீப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம், லிடன் தாஸ், மஹ்மதுல்லா, மொசாதிக் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின், மெஹிதி ஹசன், மஷ்ரபி மொர்தஸா, முஸ்தபிசுர் ரஹ்மான்

மறுமுனையில் இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் ஒரு வெற்றியினையும் பெறாத காரணத்தினால் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறி இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியும், உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அந்தவகையில், ஆப்கானிஸ்தான் அணியில் அப்தாப் ஆலம், ஹஷ்ரத்துல்லா சஷாய் ஆகியோருக்கு பதிலாக சமியுல்லா சின்வாரி மற்றும் தவ்லாத் சத்ரான் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி – குல்படின் நயீப் (அணித்தலைவர்), றஹ்மத் ஷாஹ், ஹஸ்மத்துல்லா சஹிதி, அஸ்கர் ஆப்கான், மொஹமட் நபி, சமியுல்லா சின்வாரி, இக்ராம் அலி கில், நஜிபுல்லா சத்ரான், ரஷீத் கான், தவ்லத் சத்ரான், முஜிப் உர் ரஹ்மான் 

பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ் அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லிடன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் எதிர்பார்த்த தொடக்கத்தை தரவில்லை. பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டாக மாறிய லிடன் தாஸ் 16 ஓட்டங்களை மட்டுமே பெற்றார். இதேநேரம் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான  தமிம் இக்பால் 36 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். 

சாதனைகளுடனே இலங்கை இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது

கடந்த 21ஆம் திகதி, உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிர்ச்சியான……

பின்னர் புதிய துடுப்பாட்ட வீரர்களாக வந்த சகீப் அல் ஹசன் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் ஆகிய இருவரும் அரைச்சதங்கள் பெற்று பங்களாதேஷ் அணிக்கு உதவினர். இவர்களோடு மொசாதிக் ஹொசைனும் சிறு அதிரடி ஒன்றின் மூலம் பங்களாதேஷ் அணிக்கு பலம் சேர்த்தார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் அணி  7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் முஸ்பிகுர் ரஹீம் 87 பந்துகளில் அவரின் 35ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 83 ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்தோடு சகீப் அல் ஹசன் அவரின் 45ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 69 பந்துகளில் ஒரு பெளண்டரி உடன் 51 ஓட்டங்களை குவித்திருந்தார். சகீப் அல் ஹசன் ஏற்கனவே இந்த உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு சதங்களையும், இரண்டு அரைச் சதங்களையும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு அதிரடி காட்டிய மொசாதிக் ஹொசைன் 24 பந்துகளுக்கு 35 ஓட்டங்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக முஜிப் உர் ரஹ்மான் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அணித்தலைவர் குல்படின் நயீப் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 263 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 200 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சமியுல்லா சின்வாரி 51 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்திருந்தார். அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவரான குல்படின் நயீப் இப்போட்டியில் 47 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் சகீப் அல் ஹஸன் 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார். அத்தோடு இப்போட்டியின் மூலம் இரண்டாவது தடவையாக ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுக்களை சாய்த்த சகீப் அல் ஹஸன் தனது சிறந்த பந்துவீச்சு பிரதியினையும் பதிவு செய்தார். அதேநேரம், முஸ்தபிசுர் ரஹ்மானும் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி பங்களாதேஷ் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மாலிங்க ஒரு வரலாற்று சாதனையாளர் – திமுத் கருணாரத்ன

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு….

போட்டியின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணிக்காக சகலதுறைகளிலும் பிரகாசித்த சகீப் அல் ஹஸன் தெரிவாகினார். 

இப்போட்டியின் வெற்றியுடன் தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ள பங்களாதேஷ் அணி, தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இந்திய அணியினை ஜூலை மாதம் 02ஆம் திகதி பர்மிங்ஹம் நகரில் எதிர்கொள்கின்றது.

அதேவேளை, இப்போட்டியுடன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் மற்றுமொரு ஏமாற்றத்தை சந்தித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் பாகிஸ்தான் அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (29) லீட்ஸ் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

ஸ்கோர் விபரம் 

Result


Bangladesh
262/7 (50)

Afghanistan
200/10 (47)

Batsmen R B 4s 6s SR
Liton Das c Hashmatullah Shahidi b Mujeeb ur Rahman 16 17 2 0 94.12
Tamim Iqbal b Mohammad Nabi 36 53 4 0 67.92
Shakib Al Hasan (vc) lbw b Mujeeb ur Rahman 51 69 1 0 73.91
Mushfiqur Rahim c Mohammad Nabi b Dawlat Zadran 83 87 4 1 95.40
Soumya Sarkar lbw b Mujeeb ur Rahman 3 10 0 0 30.00
Mahmudullah c Mohammad Nabi b Gulbadin Naib 27 38 2 0 71.05
Mosaddek Hossain b Gulbadin Naib 35 24 4 0 145.83
Mohammad Saifuddin not out 2 2 0 0 100.00


Extras 9 (b 0 , lb 0 , nb 0, w 9, pen 0)
Total 262/7 (50 Overs, RR: 5.24)
Fall of Wickets 1-23 (4.2) Liton Das, 2-82 (16.6) Tamim Iqbal, 3-143 (29.2) Shakib Al Hasan (vc), 4-151 (31.6) Soumya Sarkar, 5-207 (42.6) Mahmudullah, 6-251 (48.3) Mushfiqur Rahim, 7-262 (49.6) Mosaddek Hossain,

Bowling O M R W Econ
Mujeeb ur Rahman 10 0 39 3 3.90
Dawlat Zadran 9 0 64 1 7.11
Mohammad Nabi 10 0 44 1 4.40
Gulbadin Naib 10 1 56 2 5.60
Rashid Khan 10 0 52 0 5.20
Rahmat Shah 1 0 7 0 7.00


Batsmen R B 4s 6s SR
Gulbadin Naib c Liton Das b Shakib Al Hasan (vc) 47 75 3 0 62.67
Rahmat Shah c Tamim Iqbal b Shakib Al Hasan (vc) 24 35 3 0 68.57
Hashmatullah Shahidi st Mushfiqur Rahim b Shakib Al Hasan (vc) 11 31 0 0 35.48
Asghar Afghan c Sabbir Rahaman b Mosaddek Hossain 20 38 1 0 52.63
Mohammad Nabi b Shakib Al Hasan (vc) 0 2 0 0 0.00
Samiullah Shinwari not out 49 51 3 1 96.08
Ikram Alikhil run out (Liton Das) 11 12 1 0 91.67
Najibullah Zadran st Mushfiqur Rahim b Shakib Al Hasan (vc) 23 23 2 0 100.00
Rashid Khan c Mashrafe Mortaza b Mustafizur Rahman 2 3 0 0 66.67
Dawlat Zadran c Mushfiqur Rahim b Mustafizur Rahman 0 8 0 0 0.00
Mujeeb ur Rahman b Mohammad Saifuddin 0 4 0 0 0.00


Extras 13 (b 1 , lb 6 , nb 0, w 6, pen 0)
Total 200/10 (47 Overs, RR: 4.26)
Fall of Wickets 1-49 (10.5) Rahmat Shah, 2-79 (20.5) Hashmatullah Shahidi, 3-104 (28.1) Gulbadin Naib, 4-104 (28.3) Mohammad Nabi, 5-117 (32.2) Asghar Afghan, 6-132 (35.1) Ikram Alikhil, 7-188 (42.4) Najibullah Zadran, 8-191 (43.3) Rashid Khan, 9-195 (45.4) Dawlat Zadran, 10-200 (46.6) Mujeeb ur Rahman,

Bowling O M R W Econ
Mashrafe Mortaza 7 0 37 0 5.29
Mustafizur Rahman 8 1 32 2 4.00
Mohammad Saifuddin 8 0 33 1 4.12
Shakib Al Hasan (vc) 10 1 29 5 2.90
Mehidy Hasan Miraz 8 0 37 0 4.62
Mosaddek Hossain 6 0 25 1 4.17



முடிவு – பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்களால் வெற்றி