டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் உலகின் முதலிடத்தில் கோஹ்லி

338
@AFP

துடுப்பாட்ட வீரர்களுக்கான உலக டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி இந்திய கிரிக்கெட் அணியின் ஏழாவது வீரராக விராத் கோஹ்லி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அறிமுக வீரரின் சதத்துடன் ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் கண்டி..

எஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (05) காலை டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான .சி.சி. யின் தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் ஏழாவது இந்திய வீரராக முதலிடத்தை பிடித்து மற்றொரு மைல்கல்லை எட்டிய கோஹ்லி, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் முதல் இந்திய வீரராக முதலிடத்திற்கு முன்னேறினார்.  

இங்கிலாந்துடனான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தபோதும் கோஹ்லி இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 149 மற்றும் 51 ஓட்டங்களை பெற்று 31 தரநிலை புள்ளிகளை அதிகரித்துக் கொண்டார். இதன்மூலம் கடந்த 31 மாதங்களாக தரவரிசையில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திய ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி உச்சத்தை பிடிக்க கோஹ்லியால் முடிந்தது.

இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கோஹ்லி, 2015 டிசம்பர் மாதம் தொடக்கம் முதலிடத்தில் இருந்து வந்த ஸ்மித்தை விடவும் ஐந்து புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். எனினும், இங்கிலாந்துடனான எஞ்சிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தனது ஆட்டத்திறமையை தக்கவைத்துக் கொண்டாலேயே தொடர் முடிவில் கோஹ்லியால் தரவரிசையில் உச்சத்தில் நீடிக்க முடியும்.  

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு…

டெண்டுல்கர் 2011 ஜனவரியில் தென்னாபிரிக்காவின் ஜக் கல்லிஸுடன் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டபோதும், 2011 ஜுன் மாதத்தில் ஜமைக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை அடுத்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் டெண்டுல்கரால் ஆட முடியாமல் போனது.  

கோஹ்லி தவிர, டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கௌதம் காம்பீர், சுனில் கவாஸ்கர், விரேந்தர் ஷெவாக் மற்றும் திலிப் வெங்சர்கார் ஆகியோர் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அனைத்துக் காலத்திற்குமான புள்ளிகள் அடிப்படையில் 934 புள்ளிகளை பெற்றிருக்கும் கோஹ்லி இந்தியாவில் முதலிடம் வகிக்கும் துடுப்பாட்ட வீரர் என்பதோடு, சர்வதேச அளவில் 14 ஆவது இடத்தில் உள்ளார். கோஹ்லி 903 புள்ளிகளுடன் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியபோது அவர் கவாஸ்கரை விடவும் 13 புள்ளிகளே பின்தங்கி இருந்தார். தற்போது அவர் .சி.சியின்ஹோல் ஒப் பேம்கௌரவத்தை பெற்ற கவாஸ்கரை விடவும் கோஹ்லி 18 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார்.

லோட்ஸில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி மீண்டும் ஒருமுறை சிறப்பாக துடுப்பெடுத்தாடினால் அவரால் மெதிவ் ஹெய்டன், கல்லிஸ் மற்றும் ஏபி டிவிலியர்ஸை பின்தள்ளி முதல் 10 இடங்களுக்கு முன்னேற முடியும். இந்த மூன்று வீரர்களும் தலா 935 புள்ளிகளை பெற்றுள்ளனர். டொனால்ட் பிரட்மன் (961) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (947) ஆகியோர் அனைத்து காலத்திற்குமான தரவரிசை பட்டியலில் முதலிரு இடங்களில் உள்ளனர்.    

மீண்டும் இலங்கை அணியில் இணைய மாலிங்கவுக்கு வாய்ப்பு

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான…

இந்தியாவுக்கு பல கௌரவங்களை சேர்த்துள்ள கோஹ்லி, 2008இல் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தை வென்றதோடு, 2017இல் .சி.சி. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பில் சோர்பஸ் விருதை வென்றார். அவர் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறும் 76 ஆவது வீரராவார். அவர் ஒருநாள் துடுப்பாட்ட வீரருக்கான தரவரிசையிலும் முதலிடத்தில் இருப்பதோடு டி-20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்சை விடவும் 220 புள்ளிகள் பின்தங்கி 12 ஆவது இடத்தில் காணப்படுகிறார்.

இங்கிலாந்தின் 1000ஆவது டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அந்த அணியின் 20 வயது சாம் கர்ரன், திறமையை வெளிக்காட்டிய மற்றொரு வீரராவார்.  

இடதுகை சகலதுறை வீரரான அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 24 மற்றும் 63 ஓட்டங்களை பெற்றதோடு, பந்துவீச்சில் 92 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றது மாத்திரமல்ல, புதிய தரவரிசை பட்டியலிலும் அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளார்.

துடுப்பாட்ட தரவரிசையில் 152 ஆவது இடத்தில் இருந்து 72 ஆவது இடத்திற்கு பாய்ச்சல் கண்டிருக்கும் சாம் கர்ரன், பந்துவீச்சு தரவரிசையில் 49 இடங்கள் முன்னேறி 62 ஆவது இடத்திற்கு வந்துள்ளார். அதேபோன்று சகலதுறை வீரருக்கான தரவரிசையில் 58 இடங்கள் முன்னேறி 37 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.  

இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ஜோன்னி பெஸ்டோ தரவரிசையில் அதிக முன்னெற்றம் கண்ட மற்றொரு இங்கிலாந்து வீரராவார். யொக்ஷயரைச் சேர்ந்த அவர் துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி மேற்கிந்திய தீவுகளின் கிரேக் பிரத்வெயிட்டுடன் 12 ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.   

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் சோபிக்க தவறிய அலஸ்டயர் குக் 4 இடங்கள் சரிந்து 17 ஆவது இடத்திலும், லோகேஷ் ராஹுல் ஒரு இடம் கீழிறங்கி 19 ஆவது இடத்திலும், அஜிங்கியா ரஹானே 3 இடங்கள் பின்தள்ளப்பட்டு 22 ஆவது இடத்திலும், முரளி விஜேய் மற்றும் ஷிகர் தவான் முறையே இரண்டு மற்றும் ஒரு இடம் பின்தங்கி 25 ஆவது இடத்தையும் பகிர்ந்து கொண்டிருப்பதோடு, 5 இடங்கள் கீழிறங்கிய பென் ஸ்டொக்ஸ் 33 ஆவது இடத்தில் உள்ளார்.  

டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதல் இருபது இடங்களில் ஸ்டுவட் பிரோட் மற்றும் முஹமது ஷமி இருவருமே சரிவை சந்தித்திருப்பதோடு ஜேம்ஸ் அன்டர்ஸன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். எனினும், அவர் இரண்டாவது இடத்தில் இருக்கும் ககிசோ றபாடாவை விடவும் இரண்டு புள்ளிகள் மாத்திரமே முன்னிலை பெற்றுள்ளார்.     

பிரோட் ஒரு இடம் சரிந்த நிலையில் தற்போது 13 ஆவது இடத்தில் காணப்படுவதோடு, ஷபி இரண்டு இடங்கள் பின்தங்கிய நிலையில் 19 ஆவது இடத்தில் காணப்படுகிறார்.

துடுப்பாட்டத்தின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சோபிக்கத் தவறியதற்கு பதிலாக, ஸ்டொக்ஸ் பந்துவீச்சில் இந்தியாவின் கடைசி நான்கு விக்கெட்டுகளில் மூன்று உட்பட மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேற்றம் கண்டு 27 ஆவது இடத்தைப் பிடித்தார்.  

கிரிக்கெட் வாழ்வின் முடிவை நெருங்கும் ஹேரத்

ரங்கன ஹேரத்தின் கடந்த ஒரு தசாப்த கால சாகச கதை..

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் மற்றும் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 14 தரநிலை புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளார். இதன்மூலம் அவர் பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் வெர்னொன் பிலென்டரை விடவும் வெறுமனே ஒரு புள்ளி பின்தங்கி ஐந்தாவது இடத்தில் உள்ளார். இஷான்த் ஷர்மா 19 புள்ளிகளை வென்று 25 புள்ளிகளுடன் இருக்கும் சக வீரர் புவனேஷ்வர் குமாரை 13 புள்ளிகளால் நெருங்கியுள்ளார்.   

எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் லோட்ஸ் டெஸ்டுக்கு பின்னர் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ளது.

.சி.சி. டெஸ்ட் தரைவரிசை (எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டிக்கு பின், ஓகஸ்ட் 05)

துடுப்பாட்டம் (முதல் 20)

தரம் (+/-)           வீரர்   அணி புள்ளி
01 (+1) விராட் கோஹ்லி இந்தியா  934
02 (-1) ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலியா  929
03 (-) ஜோ ரூட் இங்கிலாந்து  865
04 (-) கேன் வில்லியம்சன் நியூசிலாந்து  847
05 (-) டேவிட் வோர்னர் அவுஸ்திரேலியா  820
06 (-) சி. புஜாரா இந்தியா  791
07 (-) திமுத் கருணாரத்ன இலங்கை  754
08 (-) தினேஷ் சந்திமால் இலங்கை  733
09 (-) டீன் எல்கர் தென்னாபிரிக்கா  724
10 (-) எய்டன் மக்ராம் தென்னாபிரிக்கா  703
11 (-) ரொஸ் டெய்லர் நியூசிலாந்து  697
12= (-) கிரேக் பிரத்வெய்ட் மே.. தீவுகள்  695  
(+4) ஜொன்னி பெஸ்டோ இங்கிலாந்து  695
14 (-) ஹஷிம் அம்லா தென்னாபிரிக்கா  673
15 (-) அசார் அலி பாகிஸ்தான்  672
16 (+1) பாப் டூ பிளசிஸ் தென்னாபிரிக்கா  665
17 (-4) அலஸ்டயர் குக் இங்கிலாந்து  658
18 (+2) குசல் மெண்டிஸ் இலங்கை  641
19 (-1) லோகேஷ் ராகுல் இந்தியா  634
20 (+1) உஸ்மான் கவாஜா அவுஸ்திரேலியா  633

பந்துவீச்சு (முதல் 20)

தரம் (+/-)           வீரர்   அணி புள்ளி
01 (-) ஜேம்ஸ் அன்டர்ஸன் இங்கிலாந்து  884
02 (-) ககிசோ றபாடா தென்னாபிரிக்கா  882
03 (-) ரவிந்திர ஜடேஜா இந்தியா  857
04 (-) வெர்னன் பிளென்டர் தென்னாபிரிக்கா  826
05 (-) ஆர். அஷ்வின் இந்தியா  825
06 (-) பட் கம்மின்ஸ் அவுஸ்திரேலியா  800
07 (-) டிரன்ட் போல்ட் நியூசிலாந்து  795
08 (-) ரங்கன ஹேரத் இலங்கை  791
09 (-) நீல் வெக்னர் நியூசிலாந்து  765
10 (-) ஜோஷ் ஹேசில்வூட் அவுஸ்திரேலியா  759
11 (-) ஷனொன் கப்ரியல் மே.. தீவுகள்  757
12 (+1) ஜேசன் ஹோல்டர் மே.. தீவுகள்  731
13 (-1) ஸ்டுவட் பிரோட் இங்கிலாந்து  730
14= (-) டிம் சௌதி நியூசிலாந்து  720
(-) மிச்சல் ஸ்டார்க் அவுஸ்திரேலியா  720
16 (-) நெதன் லியோன் அவுஸ்திரேலியா  710
17 (+1) கேசவ் மஹராஜ் தென்னாபிரிக்கா  692
18 (+1) யாஸிர் ஷாஹ் பாகிஸ்தான்  683
19 (-2) மொஹமது ஷமி இந்தியா  680
20 (-) கெமர் ரொச் மே.. தீவுகள்  667

சகலதுறை (முதல் 05)

தரம் (+/-)           வீரர்   அணி புள்ளி
01 (-) ஷகிப் அல் ஹஸன் பங்களாதேஷ்  420
02 (-) ரிவிந்திர ஜடேஜா இந்தியா  385
03 (-) வெர்ன் பிளென்டர் தென்னாபிரிக்கா  370
04 (-) ஆர். அஷ்வின் இந்தியா  359
05 (-) ஜேசன் ஹோல்டர் மே.. தீவுகள்  354

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<