அறிமுக வீரரின் சதத்துடன் ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா

896
Reeza Hendricks became the 14th batsman and 3rd South African to score a hundred on ODI debut.

இலங்கை அணிக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், சகலதுறையிலும் சிறப்பாக செயற்பட்ட தென்னாபிரிக்க அணி 78 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று, தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்க அணி நிர்ணயித்திருந்த 364 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா மாத்திரம் அரைச்சதம் பெற, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, 285 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

டி கொக்கின் அதிரடியுடன் இரண்டாவது வெற்றியை சுவைத்த தென்னாபிரிக்கா

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கியது. இந்த போட்டியில் இலங்கை அணி ஷெஹான் ஜெயசூரியவுக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா அணிக்குள் அழைக்கப்பட்டிருந்ததுடன், தென்னாபிரிக்க அணியில் கடந்த போட்டிகளில் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறிய எய்டன் மர்க்ரமிற்கு பதிலாக ரீஸா ஹென்ரிக்ஸ் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார்.

இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, ஆரம்பத்திலிருந்து இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆரம்பத்தில் ஹஷிம் அம்லா துடுப்பாட்டத்தை வழிநடத்த, டி கொக் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் தனியொருவராக அணியின் ஓட்டங்களை உயர்த்திய அம்லா அரைச்சதம் கடக்க, அறிமுக வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார்.

பின்னர், பந்து வீச்சாளர்களை இலகுவாக எதிர்கொண்ட தென்னாபிரிக்க வீரர்கள் சிறப்பான ஓட்ட வேகத்துடன் ஓட்டங்களை குவித்தனர். வேகமாக துடுப்பெடுத்தாடிய அம்லா 59 பந்துகளுக்கு 59 ஓட்டங்களை பெற்றிருந்த போது திசர பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த அணித் தலைவர் பாப் டு ப்ளெசிஸின் (10 ஓட்டங்கள்) விக்கட்டையும் பெரேரா வீழ்த்தினார்.

எவ்வாறாயினும், தனது அறிமுக போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்த, ரீஸா ஹென்ரிக்ஸ் டுமினியுடன் இணைந்து தனது கன்னி அரைச்சதத்தை கடந்தார். இருவரும் ஓட்டங்களை குவித்து இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான சவாலை முன்வைத்தனர்.

இவர்களது இணைப்பாட்டத்தை தகர்ப்பதற்கு லஹிரு குமார அழைக்கப்பட, அவரின் ஓவருக்கு இரண்டு பௌண்டரிகளை அடுத்தடுத்து விளாசிய ரீஸா ஹென்ரிக்ஸ் தனது கன்னி சதத்தை 88 பந்துகளில் எட்டினார். தென்னாபிரிக்க அணி சார்பில் கொலிங் இங்ரம் மற்றும் டெம்பா புவ்மா ஆகியோரை அடுத்து அறிமுக போட்டியில் சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை ரீஸா ஹென்ரிக்ஸ் பெற்றதுடன், அறிமுக வீரரால் பெறப்பட்ட வேகமான சதமாகவும் இவரது கன்னி சதம் பதிவாகியது.

கன்னி சதம் பெற்ற அடுத்த பந்தில் ரீஸா ஹென்ரிக்ஸ், லஹிரு குமாரவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து 102

சவாலான வெற்றி இலக்கை நோக்கி முன்னேறும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி

ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் தென்னாபிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை இலங்கை அணிக்கு சவால் கொடுக்கக் கூடியதாகவே இருந்தது. தொடர்ந்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் ஜே.பி.டுமினி அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, 70 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை பெற்ற டுமினி சதத்தை தவறவிட்டு வெளியேறினார். இறுதியில், டேவிட் மில்லர் 47 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை விளாச, தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 363 ஓட்டங்களை குவித்தது. இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் தனியொருவராக திசர பெரேரா 75 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை மைதானங்களை பொருத்தவரையில், இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் எட்டப்படாத ஒரு மிகப்பெரிய வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பத்திலிருந்து வேகமாக ஓட்டங்களை பெற முயற்சித்தது. அழுத்தத்திற்கு மத்தியில் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்த இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக களமிறங்கிய டிக்வெல்ல மற்றும் உபுல் தரங்க மீண்டும் அணிக்கு ஏமாற்றமளித்தனர்.

தொடர்ந்து வருகைதந்த எதிர்பார்க்கப்பட்ட குசல் பெரேரா வந்த வேகத்தில் நான்கு ஓட்டங்களுடன் அவரது ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார். இவர் வேகமாக ஓட்டங்களை பெற முற்பட்ட நிலையில், 27 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, பெஹலுக்வாயோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறக்கப்பட்ட திசர பெரேரா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த குசல் மெண்டிஸ் மற்றும் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் சிறிய இணைப்பாட்டமொன்றை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் 43 ஓட்டங்களை இணைந்து பெற்றுக்கொடுத்த நிலையில், குசல் மெண்டிஸ் லுங்கி என்கிடியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மெண்டிஸ் 31 ஓட்டங்களுடன் வெளியேற, அஞ்செலோ மெதிவ்ஸ், தப்ரைஷ் சம்ஷியின் பந்து வீச்சில் 32 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனால் இலங்கை அணி 155 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழக்க, அணியின் வெற்றிக்கான வாய்ப்புகள் அனைத்தும் மூடப்பட்டன.

இறுதியில் இலங்கை அணிக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அகில தனஞ்சய மற்றும் தனஞ்சய டி சில்வா ஜோடி, இந்த போட்டியில் அணியின் அதிகூடிய இணைப்பாட்டத்தை பகிர்ந்தது. இந்த ஜோடி 7ஆவது விக்கெட்டுக்காக 95 ஓட்டங்களை பகிர்ந்தது. இதில் அகில தனஞ்சய 37 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக தனஞ்சய டி சில்வா 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க இலங்கை அணி 285 ஓட்டங்களுக்கு சுருண்டது. தென்னாபிரிக்க அணி சார்பில் லுங்கி என்கிடி 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

இதன்படி தொடரில் மேலும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில், தென்னாபிரிக்க அணி தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் தொடரை பொருத்தவரையில் இலங்கை அணி பலமான அணியாக தங்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றது. அத்துடன், தென்னாபிரிக்க அணியிடம், இலங்கை அணி தொடர்ச்சியாக தங்களது 11ஆவது ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்து மோசமான சாதனையை தொடர்கிறது.

மோசமான பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என்ற அனைத்திலும் தங்களை நிரூபிக்கத் தவறி வருகின்ற இலங்கை அணி, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அணியை பலமாக்க வேண்டிய கட்டாயத்துக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த நிலையில் தென்னாபிரிக்க அணியிடம் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கும், திறமையை வெளிப்படுத்த தவறி வரும் இலங்கை வீரர்களும் அடுத்தப் போட்டியிலாவது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

ஸ்கோர் சுருக்கம்









Title





Full Scorecard

South Africa

363/7

(50 overs)

Result

Sri Lanka

285/10

(45.2 overs)

SA won by 78 runs

South Africa’s Innings

Batting R B
H Amla b T Perera 59 59
Quinton de Kock c K Janith b L Kumara 2 8
R Hendricks b L Kumara 102 89
Faf du Flessis c S Lakmal b T Perera 10 14
JP Duminy c D De Silva b T Perera 92 70
D Miller c D De Silva b T Perera 51 47
A Phehlukwayo not out 24 11
W Mulder b A Dananjaya 2 3
Extras
21 (b4, lb 3, w13, nb1)
Total
363/7 (50 overs)
Fall of Wickets:
1-42 (De Kock, 6 ov), 2-101 (H Amla, 17 ov), 3-137 (Du Flessis, 22.4 ov), 4-215 (R Hendricks, 34.5 ov), 5-318 (JP Duminy, 46.3 ov), 6-340 (D Miller, 48.4 ov), 7-363 (W Mulder, 50 ov)
Bowling O M R W E
S Lakmal 9 1 59 0 6.56
L Kumara 10 0 67 2 6.70
A Dananjaya 10 0 81 1 8.10
T Perera 10 0 75 4 7.50
P Jayasuriya 6 0 42 0 7.00
D.De.Silva 5 0 32 0 6.40

Sri Lanka’s Innings

Batting R B
U Tharanga c W Mulder b L Ngidi 19 17
N Dickwella c Du Flessis b L Ngidi 10 10
K Janith lbw by A Phehlukwayo 27 17
K Mendis c W Mulder b L Ngidi 31 34
NLTC Perera c De Kock b W Mulder 16 14
A Mathews lbw by T Shamsi 32 42
D De Silva c De Kock b A Phehlukwayo 84 66
A Dananjaya c L Ngidi b A Phehlukwayo 37 42
S Lakmal c & b L Ngidi 12 15
P Jayasuriya b T Shamsi 0 2
L Kumara not out 7 13
Extras
10 (b 0, lb 0, w 10, nb 0)
Total
285/10 (45.2 overs)
Fall of Wickets:
1-20 (N Dickwella, 3.4 ov), 2-37 (U Tharanga, 5.2 ov), 3-63 (K Janith, 8.5 ov), 4-81 (T Perera, 11.3 ov), 5-124 (K Mendis, 19.3 ov), 6-155 (A Mathews, 26.3 ov), 7-250 (A Dananjaya, 39.2 ov), 8-273 (D De Silva, 41.5 ov), 9-275 (P Jayasuriya, 42.2 ov), 10-285 (S Lakmal, 45.2 ov)
Bowling O M R W E
K Rabada 8 0 34 0 4.25
L Ngidi 8.2 0 57 4 6.95
A Phehlukwayo 9 0 74 3 8.22
W Mulder 6 0 34 1 5.67
T Shamsi 10 0 62 2 6.20
JP Duminy 4 0 24 0 6.00







>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<