கிரிக்கெட் வாழ்வின் முடிவை நெருங்கும் ஹேரத்

525

ரங்கன ஹேரத்தின் கடந்த ஒரு தசாப்த கால சாகச கதை முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களுக்கும் அச்சுறுத்தல் கொடுத்த பந்துவீச்சாளராகவே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது கடைசி தொடருக்கு முந்திய போட்டிகளிலும் கூட அவரது அச்சுறுத்தல் பந்துவீச்சு தொடர்கிறது. இந்த ஆண்டு கடைசியில் இங்கிலாந்துடனான போட்டிகளோடு அவர் ஓய்வு பெறுவதற்கு காத்திருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்றதன் பின்னர் ரங்கன ஹேரத் இலங்கையின் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக பொறுப்பேற்றது ரோலர் கொஸ்டரில் செல்வது போல சவால் மிக்கதாக இருந்தது.   

தென்னாபிரிக்காவுடனான முதல் மோதலில் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றி

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கிடையிலான முதலாவது…

முரளி இல்லாமல் இலங்கை அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்று பலரும் சந்தேகம் கொண்டனர். ஆனால் ஹேரத் அபாரமாக ஆடினார், அவரது பந்துவீச்சாலேயே இலங்கை பல பிரபல வெற்றிகளையும் பெற்றது.  

2009 ஆம் ஆண்டு குமார் சங்கக்கார இலங்கை அணியின் டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டபோது, அவர் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு காலி டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு 48 மணி நேரம் இருக்கும்போது முரளி காயமடைய, இலங்கை குழாமில் மாற்று சுழல் பந்து வீச்சாளராக சுராஜ் ரந்திவ் இருந்தார். அப்போது 29 வயதாக இருந்த லெக்ஸ்பின் சுழல்  பந்து வீச்சாளர் மாலிங்க பண்டாரவே இரண்டாவது சுழல் பந்து வீச்சாளருக்கான சிறந்த தேர்வாக இருந்தார். என்றாலும், உள்ளூர் போட்டிகளில் அதிக அனுபவம் கொண்ட ஹேரத்தை இணைப்பது நீண்ட காலத்திற்கு உதவும் என்று சங்கக்காரவின் உள்மனது சொன்னது.

ஆனால் அது துணிந்து செய்ய வேண்டிய வேலை. ஹேரத் அப்போது நாட்டில் கூட இருக்கவில்லை. 31 வயதாக இருந்த அவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்றிருந்தார்.  

இங்கிலாந்தில் இருக்கும் ஹேரத்தை அழைத்த சங்கா, சுழல் பந்துக்கு சிறப்பாக துடுப்பெடுத்தாடக் கூடிய ஓர் அணிக்கு எதிராக சவாலான கிரிக்கெட் போட்டியில் ஆடுவதற்கு தயாரா? என்றே ஹேரத்திடம் முதலில் கேட்டார். அதற்கு ஹேரத் உடன்பட, உடனே நாட்டுக்கு வரும்படி அழைக்கப்பட்டார்.   

அந்த டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் கொழும்பை அடைந்த ஹேரத், வீதி நெரிசல்களுக்கு இடையே காலி வீதி வழியாக அணியினர் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையை அடைந்தார். அடுத்த நாள் காலையில் இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்பினார்.

ஆரம்ப டெஸ்ட்டில் பாகிஸ்தானுக்கு 168 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின் போது இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 71 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன்படி கடைசி நாளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற 97 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க வேண்டி இருந்தது. பாகிஸ்தான் அணியில் முஹமது யூசுப், யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் மற்றும் சொஹைப் மலிக் ஆகிய வீரர்கள் இருக்கும்போது இந்த இலக்கு மிக மிக இலகுவானது.  

ஆனால் ஹேரத் அடுத்த நாள் காலையில் துடுப்பாட்ட வீரர்களை மிரட்டி பாகிஸ்தான் அணியை 117 ஓட்டங்களுக்கு சுருட்டினார், ஆட்ட நாயகன் விருதைக் கூட வென்றார்.

ஹேரத் 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கன்னி போட்டியில் ஆடியபோதும் தனக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்திருந்தார். உண்மையில் அது அவரது கடைசி சந்தர்ப்பமாகவே இருந்தது. இன்று அவர் 430 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதல் பத்து இடங்களை பிடித்திருப்பதோடு இடதுகை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக சாதனை படைத்துள்ளார். உங்களுக்கு சாதகமான சூழல் வரும் வரை காத்திருந்து விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போராட வேண்டும் என்ற பாடத்தை அவரது கிரிக்கெட் வாழ்வு கற்றுத் தருகிறது.

ஒருநாள் அரங்கில் கன்னி வெற்றியை சுவைத்த நேபாளம்

நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில், இன்று (03) அம்ஸ்டெல்வினீல்…

சரியான நேரத்தில் அந்த சரியான முடிவை எடுத்த பெருமை அனைத்தும் சங்கக்காரவையே சேரும். என்றாலும் அர்ஜுன ரனதுங்க பத்து ஆண்டுகள் தலைமை வகித்தது போன்று, சங்கக்காரவும் நீண்ட காலம் இலங்கை அணித் தலைவராக இருக்க தகுதிபெற்றவர் என்றபோதும் அவரது தலைமை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது கவலைக்குரிய விடயமாகும். ஆனால் அரசியல் மற்றும் இதர விடயங்கள் அவர் அந்த முடிவை எடுப்பதற்கு தூண்டியது. கடைசியில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர் ஒன்றை வென்ற ஒரே இலங்கை தலைவராக தமது பெயரை தக்கவைத்துக் கொண்டு சங்கக்கார விடைபெற்றார்.  

ஆனால் கடந்த பல ஆண்டுகளில் ஹேரத்தின் ரசிகர் வட்டம் அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்த 40 வயது பந்து வீச்சாளரின் வாழ்வில் முக்கிய ஒரு நிகழ்வாக, 2011 ஆம் ஆண்டு டெர்பனில் நடந்த டெஸ்டில் இலங்கை அணி தென்னாபிரிக்காவை வீழ்த்தியபோது, தென்னாபிரிக்க மண்ணில் அந்த அணியை வென்ற முதல் சந்தர்ப்பமாக அப்போது சாதனை படைக்க ஹேரத்தின் பந்துவீச்சு பெரிதும் உதவியது. அதேபோன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தியது அவரது கிரிக்கெட் வாழ்வில் மற்றொரு முக்கிய நிகழ்வு.

தோற்றத்தில் ஒரு சிறிய மனிதனாக இருந்த போதும் ஹேரத்தின் உள்ளம் பெரியது. ஐந்து அடி, ஐந்து அங்குல ஹேரத், ஆறு அடி, ஆறு அங்குல மிச்சல் ஸ்டார்க்கின் பௌன்ஸர் பந்தை முகத்திற்கு முகம் எதிர்கொண்டது அவரது பிரபலமான நிகழ்வுகளில் ஒன்று.

துடுப்பாட்டத்தில் ஹேரத்தின் பங்களிப்பை கூறுவது கடினமாக இருந்தபோதும் அதற்கு அவர் தகுதியானவரும் கூட. ஆனால் நெருக்கடி நேரங்களில் சிறப்பாக துடுப்பெடுத்தாடக் கூடியவர்.  

2014 ஆம் ஆண்டு ஹெடிங்லி டெஸ்ட்டில் இலங்கை அணி இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்தபோது அதில் ஹேரத்தின் 48 ஓட்டங்களும் இல்லாவிட்டால் கதையே மாறி இருக்க வாய்ப்பு இருந்தது. அவர் அணித் தலைவர்அஞ்செலோ மெதிவ்ஸுடன் சேர்ந்து எட்டாவது விக்கெட்டுக்கு 149 ஓட்டங்களை பெறாதிருந்தால் இங்கிலாந்துக்கு 350 ஓட்ட இலக்கை நிர்ணயிக்க முடியாமல் போயிருக்கும்.  

அவரது மூன்று அரைச்சதங்களில் இரண்டு இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்கள் பெற தவறிய சூழநிலையிலேயே பெறப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு கொல்கத்தா டெஸ்ட்டில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்த போதே ஹேரத் அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் ஓட்டங்களை 294 ஆக உயர்த்தினார். அவர் ஒன்பதாவது வரிசையில் வந்தே இந்த ஓட்டங்களை பெற்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டர்ஹாமில் நடந்த டெஸ்ட்டிலும் இதே நிலைமையே ஏற்பட்டது. இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்கள் பெற தவறியபோது, வடக்கு இங்கிலாந்தின் கடும் குளிருக்கு மத்தியிலும் 61 ஓட்டங்களை பெற்றார் ஹேரத்.

இவ்வருட இறுதியில் இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்

இலங்கை அணி எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள்…

இந்தியாவுக்கு எதிராக முரளியின் கடைசி டெஸ்ட் போட்டியிலேயே, ஹேரத் தனது சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டினார். அவர் அந்தப் போட்டியில் 80 ஓட்டங்களை பெற்றபோதும் தனது கன்னி டெஸ்ட் சதத்தை பெறும் கனவு தவறிப்போனது. அப்போது இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 520 ஓட்டங்களை பெற்றிருந்தபோது இன்னிங்ஸை முடித்துக் கொள்ள சங்கக்கார முடிவெடுத்தது ஹேரத் அந்த மைல்கல்லை எட்டுவதை தடுத்தது. சங்கக்காரவின் அந்த முடிவு ஹேரத் ரசிகர்கள் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது உண்மையே. அந்த கௌரவத்தை பெறுவதற்கு ஹேரத் முழுத் தகுதி பெற்றவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<