இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மைதான மாற்றம்

SRI LANKA VS ENGLAND 2020

மார்ச் மாதம் இலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை வீரர்களுடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 

இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மார்ச் 27ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையில்  கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்ததது. 

எனினும், குறித்த காலப்பகுதியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் சில திருத்த வேலைகள் இருப்பதால் இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது கொழும்பு SSC மைதானத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றது. மைதானத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் செய்தியினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (17) உறுதி செய்தது. 

அதேநேரம், இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மார்ச் மாதம் 03ஆம் திகதி ஜோ ரூட் தலைமையில் இலங்கை வருகின்றது.

இலங்கை வந்த பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடருக்கு முன்பதாக 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றிலும், 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றிலும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியுடன் மோதவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நெருக்கடி தருமா ஜிம்பாப்வே?

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மலர்ந்திருக்கும் இந்த ஆண்டில் ஒரு சிறந்த

இந்தப் பயிற்சிப் போட்டிகளை அடுத்து இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் மார்ச் மாதம் 19ஆம் திகதி காலியில் ஆரம்பமாகின்றது.

தொடர் அட்டவணை

முதல் பயிற்சிப் போட்டி – மார்ச் 7-9 – கட்டுநாயக்க 

இரண்டாவது பயிற்சிப் போட்டி – மார்ச் 12-15 – P. சரவணமுத்து மைதானம், கொழும்பு

முதல் டெஸ்ட் போட்டி – மார்ச் 19-23 – காலி சர்வதேச மைதானம் 

இரண்டாவது டெஸ்ட் போட்டி – மார்ச் 27-31 – SSC மைதானம், கொழும்பு

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க