ஐசிசியின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக ஹஸரங்க தெரிவு

ICC Men's Player of the Month

392

ஐசிசி ஜூன் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

ஜூன் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்காக வனிந்து ஹஸரங்க, அவுஸ்திரேலியாவின் டிராவிஷ் ஹெட் மற்றும் ஜிம்பாப்வே அணியின் சீன் வில்லியம்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். 

லங்கா T10 தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

குறித்த இந்த மூவரில் அதிக வாக்குகளை பெற்றிருந்த வனிந்து ஹஸரங்க ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  

ஐசிசி உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாடிய இவர், 22 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததுடன், ஜூன் மாதத்தில் மொத்தமாக 10 என்ற குறைந்த சராசரியில் 26 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதேநேரம் துடுப்பாட்டத்தில் 91 ஓட்டங்களையும் பெற்றிருந்துடன், இலங்கை அணி உலகக்கிண்ணத்துக்கும் தகுதிபெற்றுள்ளது. 

இதேவேளை ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை அஷ் கார்ட்னர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<