ராகம கழகத்துக்காக சதம் பெற்ற தேசிய வீரர் ரொஷேன் சில்வா

87

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பிரிவு A உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் போட்டித் தொடரின் ஐந்து போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (07) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

பனாகொட, இராணுவ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் சோனகர் விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்கப் போராடி வருகிறது. 

உள்ளூர் போட்டிகளில் அசத்தும் தினேஷ் சந்திமால்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பிரிவு A உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான …

ஆட்டத்தின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த சோனகர் விளையாட்டுக் கழகம் 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாகப் பந்துவீசிய வலதுகை வேகப்பந்து வீச்சாளர் யசோத மெண்டிஸ் 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இராணுவப்படை அணி முதல் இன்னிங்ஸில் 374 ஓட்டங்களை பெற்ற நிலையில் சோனகர் விளையாட்டுக் கழகம் 246 ஓட்டங்களால் பின்தங்கியதால் இரண்டாவது இன்னிங்ஸில் பலோ ஒன் (follow on) செய்ய வேண்டி ஏற்பட்டது. இன்று ஆட்ட நேர முடிவின்போது சோனகர் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க அந்த அணிக்கு மேலும் 139 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை நாளை தொடரவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 374 (96.3) – லக்ஷான் எதிரிசிங்க 86, தினேஷ் சந்திமால் 84, அஷான் ரன்திக்க 77, துஷான் விமுக்தி 61, தனுஷ்க ரணசிங்க 8/76

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 128 (43.1) – நிபுன் கருனானாயக்க 31, யசோத மெண்டிஸ் 7/18

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O – 107/2 (26) – பபசர வதுகே 58*, யசோத மெண்டிஸ் 1/17

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் CCC

CCC அணிக்கு எதிரான போட்டியில் சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் போராடி வருகிறது. 

முதல் இன்னிங்ஸில் 39 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் கோல்ட்ஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 8 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி கோல்ட்ஸ் கழகம் இரண்டாவது இன்னிங்ஸில் 173 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 205 (53.2) – சந்தோஷ் குணதிலக்க 67, விஷாட் டி சில்வா 46, சொனால் தினுஷ 6/55, விஷ்வ பெர்னாண்டோ 3/40

CCC (முதல் இன்னிங்ஸ்) – 244 (59.2) – மினோத் பானுக்க 99, லசித் அபேரத்ன 38, டில்ருவன் பெரேரா 5/95, பிரபாத் ஜயசூரிய 4/76

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 212/8 (58) – விஷாட் ரன்திக்க 73, சன்துஷ் குனதிலக்க 44, சொனால் தனுஷ 5/98, விஷ்வ பெர்னாண்டோ 3/25 

இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி …

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்க மைதானத்தில் நடைபெற்றுவரும் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் செரசன்ஸ் விளைட்டுக் கழகம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்கும் நோக்கில் தனது இரண்டாவது இன்னிசுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது. 

செரசன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 176 ஓட்டங்களுக்கே சுருண்ட நிலையில் சிலாபம் மேரியன்ஸ் தனது முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் 105 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடி வரும் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.  

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 176 (83) – சாலிய ஜீவன்த 35, நிமேஷ் விமுக்தி 4/39, சதுரங்க குமார 3/25

சிலாபம் மேரியன்ஸ் (முதல் இன்னிங்ஸ்) – 281 (70.5) – ஓஷத பெர்னாண்டோ 69, சுமித் காடிகோன்கர் 60, கசுன் விதுர 49*, மொஹமட் டில்ஷாட் 4/63, சாமிக்க எதிரிசிங்க 3/105

சரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 31/2 (9) 

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

இலங்கை டெஸ்ட் அணி வீரரான ரொஷேன் சில்வா மற்றும் நிஷான் மதுஷங்கவின் சதங்கள் மூலம் லங்கன் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக ராகம கிரிக்கெட் கழகம் இமாலய ஓட்டங்களை பெற்றுள்ளது. 

கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் லங்கன் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ராகம கிரிக்கெட் கழகம் சார்பில் ரொஷேன் சில்வா மற்றும் மதுஷங்க இருவரும் 5ஆவது விக்கெட்டுக்கு 296 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர்.

இதில் ரொஷேன் சில்வா 165 ஓட்டங்களையும் மதுஷங்க 154 ஓட்டங்களையும் பெற்றனர். இதுவரை இலங்கை டெஸ்ட் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரொஷேன் சில்வா கடைசியாக 2019 ஜனவரியிலேயே இலங்கை அணிக்காக களமிறங்கினார்.

இதன்படி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது ராகம கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளை இழந்து 417 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 205 (77) – பிரிமோஷ் பெரேரா 57, கேஷான் விஜேரத்ன 51, ஷஷிக்க டுல்ஷான் 5/26, அமில அபொன்சோ 2/42

ராகம கிரிக்கெட் கழகம் – 417/6 (99) – ரொஷேன் சில்வா 165, நிஷான் மதுசங்க 154, உதித் மதுஷான் 3/103

இரண்டு முக்கிய வீரர்களின் உபாதைகளினால் அவதியுறும் இலங்கை அணி

பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய …

BRC எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

இடம் – சோனகர் கிரிக்கெட் கழக மைதானம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 328 (105.4) – சானுக்க விதானவசம் 68, லசித் லக்ஷான் 59, லிசுல லக்ஷான் 49, உபுல் இந்திரசிறி 7/120

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 279 (56.1) – அஞ்செலோ ஜயசிங்க 109, மாதவ வர்ணபுர 55, சாத் நசிம் 51, லசித் லக்ஷான் 4/21, மொஹமட் சிராஸ் 3/68, கெவின் கொத்திகொட 2/25

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 35/1 (13.3) – லசித் லக்ஷான் 24*

அனைத்து போட்டிகளினதும் மூன்றாவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை (8) தொடரும். 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…