இலங்கை கிரிக்கெட் அணிக்கு நெருக்கடி தருமா ஜிம்பாப்வே?

116

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மலர்ந்திருக்கும் இந்த ஆண்டில் ஒரு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கிரிக்கெட்டின் குறுகிய வடிவமான T20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் விளையாடிய இலங்கை அணி குறித்த தொடரை 2-0 எனப் பறிகொடுத்த பின்னர் தற்போது கிரிக்கெட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜிம்பாப்வே பயணமாகியுள்ளது. 

இலங்கையுடன் மோதும் ஜிம்பாப்வே டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ………..

அந்தவகையில், இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை (19) ஹராரே நகரில் ஆரம்பமாகின்றது. 

டெஸ்ட்  தொடர் பற்றி கவனிக்க வேண்டியவை 

ஐ.சி.சி. கடந்த ஆண்டு (2019) ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதித்திருந்தது. ஜிம்பாப்வேயின் கிரிக்கெட்டில் இருந்த அரசியல் தலையீடுகள் காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த குறித்த தடை தற்போது நீங்கிய பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஜிம்பாப்வே விளையாடும் டெஸ்ட் தொடரே ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முதல் சர்வதேச தொடராக அமைகின்றது. 

இதேநேரம், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 2018ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்குப் பின்னர் இலங்கை அணியுடனான போட்டிகள் மூலமே டெஸ்ட் போட்டிகளிலும் மீண்டும் விளையாடுகின்றது. எனவே, நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். 

இலங்கை கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடர் பற்றி கருத்து வெளியிட்டிருந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான லால்சான்ட் ராஜ்பூட் இலங்கை கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடர் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு ”புதிய தொடக்கம்” எனக் கூறியிருந்தார்.

இலங்கையுடன் மோதும் ஜிம்பாப்வே டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாம் நேற்று முன்தினம் (14) அறிவிக்கப்பட்டிருந்த …

மறுமுனையில், கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் பாகிஸ்தானுடன் அவர்களது சொந்த மண்ணில் வைத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 10 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்று இடம்பெற வழிவகைகள் செய்திருந்தது.  இவ்வாறு பாகிஸ்தானுக்கு உதவிய இலங்கை கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் விளையாடவிருப்பதன் மூலம் அவர்களின் கௌரவத்திற்குரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக் கொள்கின்றது.

எவ்வாறிருப்பினும், இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இரு அணிகளதும் கடந்த காலம்

கடந்த காலப் பதிவுகளை புரட்டும் போது இலங்கை கிரிக்கெட் அணியினை ஜிம்பாப்வே எந்த டெஸ்ட் போட்டிகளிலும் இதுவரையில் தோற்கடிக்கவில்லை என்பதோடு இலங்கை கிரிக்கெட் அணியே ஜிம்பாப்வேயிடம் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடையாத ஒரே ஆசிய அணி என்பதும் தெளிவாக தெரிகின்றது. 

இலக்கங்கள் ரீதியாக பதிவுகளை நோக்கும் போது கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து இரண்டு அணிகளும் 18 டெஸ்ட் போட்டிகளில் இதுவரையில் விளையாடியிருக்கின்றன. இதில் இலங்கை கிரிக்கெட் அணி 13 போட்டிகளில் வெற்றியினை சுவைக்க, 5 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்திருக்கின்றன.  

BCCI ஒப்பந்தப் பட்டியலில் இருந்து டோனி நீக்கம்

BCCI இன் 2020 ஆம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் ……

கடைசியாக இரண்டு அணிகளும் கடந்த 2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியதோடு, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சாதனை ஒன்றுடன் 4 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணி 

ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 6ஆம் இடத்தில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி தாம் கடைசியாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக பாகிஸ்தானுடன் விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 1-0 எனப் பறிகொடுத்திருந்தது. 

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் வெற்றி கிடைக்கும் போது அது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு உதவாது போனாலும், ஐ.சி.சி. டெஸ்ட் இன் அணிகளுக்கான தரவரிசையில் முன்னேற அது உதவியாக இருக்கும்.

இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்ட போது (குசல் ஜனித் பெரேரா உள்வாங்கப்படாமல் போன விடயம்) இலங்கை அணியின் தேர்வாளர்கள் மீது விமர்சனங்கள் எழுப்பட்டது. இருந்த போதிலும், அண்மைக்காலமாக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத அனுபவம் கொண்ட துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையிலேயே, இத்தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி தெரிவு செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன தெரிவித்தருந்தார்.  

பேசுபொருளாக மாறியிருக்கும் குசல் பெரேராவின் நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்தாக ஜிம்பாப்வேயிற்குச் சென்று அந்நாட்டு ……..

இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் முக்கிய வீரர்களாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, ஒசத பெர்னாந்து, தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் காணப்படுகின்றனர். அதேநேரம், இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறிய குசல் மெண்டிஸ், லஹிரு திரிமான்ன ஆகியோரும் ஜிம்பாப்வேயிற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இவர்கள் தவிர தனன்ஞய டி சில்வா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல தில்வருவான் பெரேரா ஆகியோர் மூலமும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறை இன்னும் பலம் பெறுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுத் துறையை நோக்கும் போது பாகிஸ்தான் தொடரில் விளையாடாது போன முன்னணி வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் களமிறங்குகின்றார். லக்மாலுடன் இணைந்து லஹிரு குமாரவும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தனது வேகத்தின் மூலம் வலுச்சேர்க்க காத்திருக்கின்றார். 

வேகப் பந்துவீச்சாளர்கள் தவிர இடதுகை சுழல்வீரர் லசித் எம்புல்தெனிய, டில்ருவான் பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு வலுவளிக்கவுள்ளனர். 

இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி

தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று ……..

இலங்கை குழாம் 

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித   

ஜிம்பாப்வே அணி

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, கடைசியாக 2018ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடிய காரணத்தினால், அவர்கள் இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகள் எப்படி இருப்பார்கள் என்பதனை அவதானிப்பது சற்றுக் கடினமாக இருக்கின்றது. இதேவேளை, ஜிம்பாப்வே டெஸ்ட்  அணிக்குள் பல மாற்றங்களும் நடைபெற்றிருக்கின்றன. 

கடைசியாக அவ்வணி டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடிய போது அவர்களின் அணித்தலைவராக காணப்பட்ட ஹமில்டன் மஷகட்சா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தற்போது அந்நாட்டு கிரிக்கெட் சபையின் இயக்குனராக செயற்பட்டு வருகின்றார். எனவே, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியினை இலங்கை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் குறைவாக மதிப்பிட்டுவிடக்கூடாது. 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியினை நோக்கும் போது அவர்களது முக்கிய வேகப் பந்துவீச்சாளரான தென்டாய் சட்டாரா காயம் காரணமாக இலங்கை தொடரிலிருந்து ஓய்வினை எடுத்துக் கொள்கின்றார். எனினும், அறிமுக வேகப் பந்துவீச்சாளர்களான விக்டர் நோச்சி மற்றும் சார்ள்ட்டன் சூமா ஆகியோர் தென்டாய் சாட்டாரவிற்குப் பதிலாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றார். 

இந்த இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் ஜிம்பாப்வே டெஸ்ட் அணி, மொத்தமாக 5 அறிமுக வீரர்களை கொண்டிருக்கின்றது. இந்த அறிமுக வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எப்படியான நெருக்கடியினை கொடுப்பார்கள் என்பதனை டெஸ்ட் தொடர் நடைபெறும் போதே பார்க்க முடியும். 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைவராக துடுப்பாட்ட சகலதுறை வீரர் ஷோன் வில்லியம்ஸ் செயற்படுகின்றார். இவர் தவிர அனுபவம் கொண்ட வீரர்களான சிக்கந்தர் ரஷா, ப்ரென்டன் டெய்லர், கிரைக் எர்வின் மற்றும் கைல் ஜார்விஸ் போன்ற அனுபவம் கொண்ட வீரர்களுடன் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இன்னும் பலம் பெறுகின்றது. 

ஜிம்பாப்வே குழாம்  

ஷோன் வில்லியம்ஸ் (அணித்தலைவர்), சிக்கந்தர் ரஷா, ரேகிஸ் சகப்வா, கிரைக் எர்வின், கைல் ஜார்விஸ், கெவின் கசுஷா, டைமெசேன் மருமா, பிரின்ஸ் மெஸ்வோர், பிரையன் மட்ஸிங்கன்யமா, கார்ல் மும்பா, ஏய்ன்ஸ்லி என்ட்லோவோயு, விக்டர் னோச்சி, ப்ரென்டன் டெய்லர், டெனால்ட் ட்ரிபானோ, சார்ள்டன் சூமா   

டெஸ்ட் தொடர் அட்டவணை 

  • முதல் டெஸ்ட் போட்டி – ஜனவரி 19-23 – ஹராரே
  • இரண்டாவது டெஸ்ட் போட்டிஜனவரி 27-31 – ஹராரே

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<