சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பிரிவு 1 (டிவிசன் 1) கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகள் இன்று நிறைவுற்றன.

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு  

புனித பேதுரு கல்லூரி  மைதானத்தில் நேற்று  (29) ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் முதல் இன்னிங்ஸில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் புனித பேதுரு கல்லூரி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 64.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. வெஸ்லி கல்லூரி சார்பாக மொவின் சுபசிங்ஹ 31 ஓட்டங்களையும், சஹில் டயஸ் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் புனித பேதுரு கல்லூரி சார்பாக சச்சின் சில்வா 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் நிரோஷ் அர்ஷன 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் முஹம்மத் அமீன் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

பொலொவ் ஓன் (Follow on) முறைக்கு தள்ளப்பட்ட வெஸ்லி கல்லூரி தமது இரண்டாவது இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. வெஸ்லி கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் சிதத் தர்மசிரிவர்தன 58 ஓட்டங்களையும், செனால் தங்கல்ல 36 ஓட்டங்களையும், சகுந்த லியனகே 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் புனித பேதுரு கல்லூரி சார்பாக சச்சின் சில்வா 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், முஹம்மத் அமீன் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் சந்துஷ் குணதிலக 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆதிலின் 5 விக்கெட்டுக்கள் வீண் : இக்கட்டான நிலையில் ஸாஹிராக் கல்லூரி

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 250 (64.4) – சச்சின் சில்வா 80*, முஹம்மத் அமீன் 41, சலித் பெர்னாண்டோ 36, லஷேன் ரொட்ரிகோ 23, செனால் தங்கல்ல 3/56, மொவின் சுபசிங்ஹ 3/56

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 134 (58.4) – மொவின் சுபசிங்ஹ 31, சகில் டயஸ் 25, சச்சின் சில்வா 5/51, நிரோஷ் அர்ஷன 2/11

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 169 (85.5) – சிதத் தர்மசிரிவர்தன 58, செனால் தங்கல்ல 36, சகுந்த லியனகே 26, சச்சின் சில்வா 5/82, முஹம்மத் அமீன் 2/60, சந்துஷ் குணதிலக 2/07

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது. புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி.


புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் ஸாஹிரா கல்லூரி, மருதானை

ஸாஹிராக் கல்லூரி  மைதானத்தில் நேற்று  ஆரம்பமான இப்போட்டியில் புனித தோமியர் கல்லூரி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 29 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 69.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஸாஹிராக் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றது. ஸாஹிராக் கல்லூரி சார்பில் ரித்மிக நிமேஷ் 23 ஓட்டங்களையும், முஹம்மத் சக்கி 22 ஓட்டங்களையும், முஹம்மத் ஷமாஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் புனித தோமியர் சார்பாக கலன பெரேரா 34 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும், டேலோன் பீரிஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அசார் அலியின் போராட்டத்தால் வலுவான நிலையில் பாகிஸ்தான்

பொலொவ் ஓன் (Follow on) முறையில் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த ஸாஹிரா கல்லூரி 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சாஹிராக் கல்லூரி சார்பில் முஹம்மத் ஷமாஸ் 24 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் புனித தோமியர் கல்லூரி சார்பாக தினேத் கன்னங்கர 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், தெவின் எரியகம 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், டேலோன் பீரிஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஷனோன் பெர்னாண்டோ 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதலாவது இன்னிங்ஸ்) – 234 (69.1) – டெலோன் பீரிஸ் 65, கிஷான் முனசிங்ஹ 44, மனீஷ ரூபசிங்ஹ 37, ஷலின் டி மேல் 24, முஹம்மத் ஆதில் 5/66, முஹம்மத் ரிபாத் 3/50

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 97 (32.2) – ரித்மிக நிமேஷ் 23, முஹம்மத் சக்கி 22, முஹம்மத் ஷமாஸ் 20, கலன பெரேரா 7/34, டெலோன் பீரிஸ் 2/30

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்)- 108 (38.5) – முஹம்மத் ஷமாஸ் 24, தினேத் கன்னங்கர 3/36, தெவின் எரியகம 2/08, டேலோன் பீரிஸ் 2/24, ஷனோன் பெர்னாண்டோ 2/16

முடிவு – புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 29 ஓட்டங்களால் வெற்றி


நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவை

கட்டுநேரிய புனித செபஸ்தியன் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் ஜோசப் வாஸ் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோசப் வாஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை நாலந்த கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய நாலந்த கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 52.2 ஓவர்களில் சகல  விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. நாலந்த கல்லூரி சார்பில் சுஹங்க விஜேவர்தன 59 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ஜோசப் வாஸ் கல்லூரி சார்பாக நிபுன் தனஞ்சய 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் கனிஷ்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், தினேத் பெர்னாண்டோ 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.   

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜோசப் வாஸ் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது. ஜோசப் வாஸ் கல்லூரி சார்பாக நிபுன் தனஞ்சய 64 ஓட்டங்களையும், திலான் பிரதீப 45 ஓட்டங்களையும், அஞ்சன ருக்மால் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் நாலந்த கல்லூரி சார்பாக லக்ஷித ரசாஞ்சன 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த நாலந்த கல்லூரி 77 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் ஜோசப் வாஸ் கல்லூரி சார்பில் சஷான் தினேத் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், நிபுன் தனஞ்சய 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும்  கைப்பற்றினர்.  

29 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுபெடுத்தாடிய ஜோசப் வாஸ் கல்லூரி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 156 (52.2) – சுஹங்க விஜேவர்தன 59. நிபுன் தனஞ்சய 3/39, ஆகாஷ் கனிஷ்க 2/22, தினேத் பெர்னாண்டோ 2/49

ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ (முதலாவது இன்னிங்ஸ்) – 204 (69.1) – நிபுன் தனஞ்சய 64, அஞ்சன ருக்மால் 51*, திலான் பிரதீப 45, லக்ஷித ரசாஞ்சன 4/69

நாலந்தா கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 77 (37.2) – சஷான் தினேத் 4/19, நிபுன் தனஞ்சய 4/28

ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ (இரண்டாவது இன்னிங்ஸ்) – 33/2 (8)

முடிவு – ஜோசப் வாஸ் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி