துயரத்தின் உச்சத்தை அனுபவிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

934
Sri Lanka stuck in a vortex of difficulties

பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரை முழுமையாக இழந்ததன் மூலம் ஒரு நாள் தொடரொன்றில் இந்த வருடம் மூன்றாவது முறையாக வைட் வொஷ் செய்யப்பட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அடுத்த உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்காது தப்பித்துக் கொண்டது மாத்திரமே இருக்கின்ற ஒரே ஆறுதலாகும்.

ஒரு நாள் தொடரில் இலங்கையை வைட் வொஷ் செய்த பாகிஸ்தான்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாஹ் நகரில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை…

2017ஆம் ஆண்டிற்கு முன்னதாக இறுதியாக 2014ஆம் ஆண்டில் ஒரு தடவை மாத்திரமே இலங்கை அணி ஒரு நாள் தொடரொன்றில் வைட் வொஷ் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணியினால் 5-0 என ஒரு நாள் தொடரொன்றில் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை அணி, அதனையடுத்து இந்தியாவினால் தமது சொந்த மண்ணில் வைத்து கடந்த ஒகஸ்ட் மாதம் முதற்தடவையாக ஒரு நாள் தொடரொன்றிலும் வைட் வொஷ் செய்யப்பட்டிருந்தது.

தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் அணியினாலும் வைட் வொஷ் செய்யப்பட்டிருக்கும் இலங்கை அணி, இந்த வருடத்தில் தாம் பங்கேற்ற 26 ஒரு நாள் போட்டிகளில் நான்கு போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்று மிகவும் மோசமான பதிவை காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரினை கைப்பற்றியதன் பின்னர் இந்த ஒரு நாள் தொடரிலும் நல்ல முடிவுகளை தரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், அந்த  எதிர்பார்ப்பிற்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

மறுமுனையில் மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனிஸ் கான் போன்ற சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் மீளக்கட்டியெழுப்பட்டு வரும் பாகிஸ்தான் அணிக்கு இந்த ஒரு நாள் தொடரும் சம்பியன்ஸ் கிண்ணமும் சிறந்த அடைவுகளாக மாறியிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் அண்மைக்காலமாக மிகவும் பலவீனமாக மாறிவருகின்றது. இறுதியாக தாம் விளையாடிய 12 ஒரு நாள் போட்டிகளில் ஒன்றிலும் கூட இலங்கை வீரர்கள் 240 ஓட்டங்களினை கடந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கை அணி பாகிஸ்தானுடனான  ஒரு நாள் தொடரில் தமது துடுப்பாட்டத்தினை முன்னேற்றும் என நம்பப்பட்டிருந்தும் அந்த நம்பிக்கை வீணாகியிருக்கின்றது.

இலங்கை அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்..

இலங்கை இந்த ஒரு நாள் தொடருக்காக ஆறு விஷேட துடுப்பாட்ட வீரர்களை பெயரிட்டிருந்தது. அதில் சகலதுறை வீரர் மிலிந்த சிறிவர்த்தனவும் அடங்கியிருந்தார். உள்ளூர் List A போட்டிகள் 150 ஐ அண்மிக்கும் வகையிலான ஆட்டங்களில் விளையாடி வெறும் 13 அரைச் சதங்களை மாத்திரம் கடந்த சிறிவர்தன ஏன் இலங்கை அணியின் ஆறாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கியிருந்தார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றாத சிறிவர்தன இத்தொடரில் மொத்தமாக 23 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.

மிலிந்த சிறிவர்தன ஒரு புறம் இருக்க, இலங்கை வீரர்கள் இத்தொடரில் அதிகபட்சமாக 209 ஓட்டங்களினையே ஒரு இன்னிங்சுக்காக குவித்திருந்தனர். அதோடு, ஒரு போட்டியில் மாத்திரமே இலங்கை வீரர்களால் 50 இற்கு மேலான ஆரம்ப இணைப்பாட்டம் பெறப்பட்டிருந்தது.  

பாகிஸ்தானின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாலும், சுழல் வீரர்கள் மூலமாகவும் (குறிப்பாக சதாப் கான் போன்ற) இலங்கையினது துடுப்பாட்டம் மிகவும் சிக்கலுக்குள்ளாக்கப்பட்டிருந்தது. அதோடு, இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களில் இருவர் மாத்திரமே மொத்தமாக இந்த தொடரில் 75 விட கூடுதலான ஓட்டங்களினை பெற்றிருந்தனர்.

உபுல் தரங்கவின் நிலையும் தற்போது ஸ்தீரமற்றுக் காணப்படுகின்றது. இலங்கை அணியின் முன்னாள் தேர்வாளர் சனத் ஜயசூரியவினால்  மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு அணித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட தரங்கவின் ஆளுகைக்கு உட்பட்டடிருந்தபோதே இலங்கை அணி இந்த மூன்று வைட்வொஷ் தோல்விகளையும் சந்தித்திருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக….

மந்த கதியில் ஓவர்களை வீசியதற்காக போட்டித் தடைகளினையும்  பெற்றுக்கொண்ட உபுல் தரங்க இந்த ஒரு நாள் தொடர் தோல்விகளுக்காக தனது பதவியினை ராஜினாமா செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என அறிவித்திருக்கின்றார்.  

இலங்கையின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் தனது பதவியினை இராஜினாமா செய்த பின்னர் வரலாற்றில் முதற்தடவையாக ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை ஒரு நாள் தொடரினை தமது சொந்த மண்ணில் வைத்து பறிகொடுத்திருந்தது. இதனால், அதிக விமர்சனங்களுக்கும் இலங்கை உள்ளாகியிருந்தது.

இலங்கை அணியின் இந்த மோசமான நிலையில் மாற்றங்களை கொண்டுவர முன்னாள் வீரர்கள், உள்ளூர் கிரிக்கெட்டில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டியதன் அவசியத்தினை அப்போது உணர்த்தியிருந்தனர். அதாவது ஐந்து அணிகளை மாத்திரம் கொண்ட மாகாண ரீதியிலான ஒரு கிரிக்கெட் தொடர் இதற்கு தீர்வாக அமையும் என அவர்களால் நம்பப்படுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கை அணி தமது படகில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்காக கரையை அடையும் முயற்சியில் இன்னும் வெற்றியடைந்திருப்பதாக தெரியவில்லை.

ஆக்கம் – Rex Clementine